Home அசைவம் ஒரு முறை சிக்கன் வாங்கி இப்படி ருசியான புதினா சிக்கன் ட்ரை பண்ணி பாருங்க அசத்தலான...

ஒரு முறை சிக்கன் வாங்கி இப்படி ருசியான புதினா சிக்கன் ட்ரை பண்ணி பாருங்க அசத்தலான சுவையில் இருக்கும்!!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீகென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தான் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றாக கூடி உட்கார்ந்து பொறுமையாக உணவை ருசித்து சாப்பிட முடியும். அப்படி அனைவரும் சாப்பிட கூடிய பொருளாக சிக்கன் இருக்கிறது. இதில் சிக்கன் குழம்பு, கிரேவி, வறுவல், 65, லாலிபப் போன்ற பல உணவு வகைகளை செய்யலாம்.

-விளம்பரம்-

சிக்கனில் எந்த உணவை கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். புதினாவில் சிக்கன் செய்து சாப்பிட்டிருக்கீங்களா? ட்ரைப் பண்ணி பாருங்க, அசத்தலாக இருக்கும்! இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். நீங்களும் வார‌ இறுதியில் சிக்கன் செய்ய நினைத்தால், தேங்காய், புதினா அரைத்து விட்ட இந்த புதினா சிக்கன் கிரேவி செய்யுங்கள். இந்த புதினா சிக்கன் மசாலா சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

முக்கியமாக இந்த சிக்கன் மசாலா செய்வது மிகவும் சுலபம். மேலும் இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். சிக்கனை எப்படி செய்தாலும் அது சுவை கொடுக்கும். அதை பக்குவமாக பார்த்து பார்த்து பதமாக செய்தால் இன்னும் எத்தனை ருசியாக இருக்கும்..? அப்படியொரு ரெசிபிதான் இது. வேலை நாட்களில் அசைவ உணவு சமைக்க நேரம் இல்லை என கருதுபவர்களும், ஞாயிறு விடுமுறைகளில் மட்டுமே கறி எடுத்து சமைக்க முடியும் என நினைப்பவர்களுக்கு எளிமையாக மற்றும் சுவையாக சிக்கனை சமைக்கும் ரெசிபி. இந்த சிக்கன் கிரேவியை பேச்சுலர்ஸ் கூட ஈசியாக செய்து விடலாம்.

Print
No ratings yet

புதினா சிக்கன் | Mint Chicken Recipe In Tamil

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீகென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தான் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றாக கூடி உட்கார்ந்து பொறுமையாக உணவை ருசித்து சாப்பிட முடியும். அப்படி அனைவரும் சாப்பிட கூடிய பொருளாக சிக்கன் இருக்கிறது. இதில் சிக்கன் குழம்பு, கிரேவி, வறுவல், 65, லாலிபப் போன்ற பல உணவு வகைகளை செய்யலாம். சிக்கனில் எந்த உணவை கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். புதினாவில் சிக்கன் செய்து சாப்பிட்டிருக்கீங்களா? ட்ரைப் பண்ணி பாருங்க, அசத்தலாக இருக்கும்! இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். நீங்களும் வார‌ இறுதியில் சிக்கன் செய்ய நினைத்தால், தேங்காய், புதினா அரைத்து விட்ட இந்த புதினா சிக்கன் கிரேவி செய்யுங்கள்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: Mint Chicken
Yield: 4 People
Calories: 99.93kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சிக்கன்
  • 1/4 கப் கொத்தமல்லி
  • 1/2 கப் தயிர்
  • 2 பெரிய வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • 1/4 கப் தேங்காய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • கல்பாசி சிறிதளவு
  • 1 அன்னாசி பூ
  • 1 மராட்டி மொக்கு
  • உப்பு                              தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, கல்பாசி, அன்னாசி பூ, மற்றும் மராட்டி மொக்கு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் நாம் அரைத்து வைத்திருக்கும் புதினா மசாலாவை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • மசாலா வாசனை போனதும் சிக்கனை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும், பின் மஞ்சள்தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன்பிறகு 5 நிமிடங்கள் கழித்து தயிரை இதனுடன் சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • பின் தண்ணீர் நன்கு சுண்டி சிக்கன் வெந்ததும் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தழை தூவி நன்றாக கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான புதினா சிக்கன் தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.9g | Protein: 7.49g | Fat: 2.79g | Sodium: 54.88mg | Potassium: 77.96mg | Fiber: 1.27g | Vitamin A: 95IU | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 2.21mg

இதனையும் படியுங்கள் : ஒரு முறை சிக்கன் வாங்கி இப்படி ருசியான சிக்கன் உப்பு கறி ட்ரை பண்ணி பாருங்க அசத்தலான சுவையில் இருக்கும்!