ஒரு முறை சிக்கன் வாங்கி இப்படி ருசியான சிக்கன் உப்பு கறி ட்ரை பண்ணி பாருங்க அசத்தலான சுவையில் இருக்கும்!

- Advertisement -

சிக்கன் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடிக்கும். வார இறுதியில் அசைவம் சாப்பிடாமல், பலருக்கும் கை, கால் ஓடாது. ஒரே மாதிரியான சிக்கன் / மட்டன் கிரேவி, சில்லி, போன்றவைகளை சாப்பிட்டு போரடித்தவர்கள், இந்த சிக்கன் உப்பு கறியை நிச்சயம் முயற்சிக்கலாம். குறைந்த நேரத்தில் எளிய முறையில் செய்யக் கூடிய இந்த சமையல், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் சுவையில் சுண்டி இழுக்கும். இந்த சிக்கனில் ஒரே விதமான உணவுகளை செய்து போர் அடிச்சிடிச்சா ஒரு முறை இந்த சிக்கன் உப்பு கறி ரெசிபியை செய்து பாருங்கள் டேஸ்ட் சும்மா அப்படி இருக்கும்.

-விளம்பரம்-

இந்த ரெசிபி செய்ய அதிக மசாலா பொருட்கள் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மிக எளிதாக நமது வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்துவிடலாம். சிக்கனை பயன்படுத்தி நமக்கு பிடித்த பல விதவிதமான ரெசிபிகளை செய்து அசத்த முடியும். அதிலும் முக்கியமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான சுவையிலும் விதவிதமான முறையிலும் சிக்கன் சமைக்கப்படுகிறது. என்னதான் வித விதமான உணவுகள் தயாரித்து சாப்பிட்டாலும் முந்தைய காலங்களில் செய்யப்பட்ட உணவுகள் ருசியே தனிதான்.குறிப்பாக ஈரோடு பகுதியில் பெருமளவு வீடுகளிலும் கடைகளிலும் செய்யப்படும் சிக்கன் உப்பு கறி வறுவல். இதற்கு பள்ளிபாளையம் சிக்கன், காட்டு கறி வறுவல், உப்பு கறி, வறுவல் என்ற வேறுசில பெயர்களும் உண்டு.

- Advertisement -

சிக்கன் உப்பு கறி ஒரு அற்புதமான சைடு டிஷ் மற்றும் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. அதோடு வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையைக் கொண்டது. இந்த சிக்கன் உப்பு கறி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டது. முக்கியமாக மழைக்காலங்களில் இந்த சிக்கன் உப்பு கறி சாப்பிடுவது அற்புதமான ஒரு அனுபவத்தை கொடுக்கும்.

Print
2.84 from 6 votes

சிக்கன் உப்பு கறி | Chicken Uppu Kari Recipe In Tamil

சிக்கன் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடிக்கும். வார இறுதியில் அசைவம் சாப்பிடாமல், பலருக்கும் கை, கால் ஓடாது. ஒரே மாதிரியான சிக்கன் / மட்டன் கிரேவி, சில்லி, போன்றவைகளை சாப்பிட்டு போரடித்தவர்கள், இந்த சிக்கன் உப்பு கறியை நிச்சயம் முயற்சிக்கலாம். குறைந்த நேரத்தில் எளிய முறையில் செய்யக் கூடிய இந்த சமையல், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் சுவையில் சுண்டி இழுக்கும். இந்த சிக்கனில் ஒரே விதமான உணவுகளை செய்து போர் அடிச்சிடிச்சா ஒரு முறை இந்த சிக்கன் உப்பு கறி ரெசிபியை செய்து பாருங்கள் டேஸ்ட் சும்மா அப்படி இருக்கும். இந்த ரெசிபி செய்ய அதிக மசாலா பொருட்கள் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மிக எளிதாக நமது வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்துவிடலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Chicken Uppu Kari
Yield: 4 People
Calories: 99kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சிக்கன்
  • 10 சின்ன வெங்காயம்
  • 15 வர ‌மிளகாய்
  • 10 பல் பூண்டு
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கல் உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 3 டீஸ்பூன் மிளகு தூள்
  • 2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், பூண்டை தோலுடன் நறுக்கி சேர்த்து நன்கு வதக்கி, சிக்கனை சேர்த்து வதக்கவும்.
  • சிக்கன் நன்கு வதங்கியவுடன் அதில் மிளகாய்த்தூள், சீரகத்தூள் மற்றும் மிளகு பொடி சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான சிக்கன் உப்பு கறி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 99kcal | Carbohydrates: 13.9g | Protein: 3.49g | Fat: 2.79g | Sodium: 54.8mg | Potassium: 77.9mg | Vitamin A: 295IU | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 3.29mg

இதனையும் படியுங்கள் : இந்த சண்டே ஸ்பெஷலாக ருசியான சிக்கன் ரோல் வீட்டிலயே இதே போல செஞ்சி பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!