- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening
ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை உணவுகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பானிபூரி, மசாலா பூரி, பேல் பூரி, சிக்கன் பக்கோடா, காளான் என எதுவாக இருந்தாலும் நாம் கடைகளில் சப்புக்கொட்டி சாப்பிடுவோம். அவை ஆரோக்கியமான உணவு இல்லை என்று நமக்கு நன்றாக தெரியும். ஆனால் அதில் இருக்கும் சுவை நாக்கில் தாண்டவமாடும்.
என்னதான் வீட்டில் சுவையாக சமைத்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வீட்டில் செய்யும் உணவுப்பொருட்களை விட வெளி உணவகங்களில் சாப்பிடும் உணவுப் பொருட்களின் சுவைதான் மிகவும் பிடித்திருக்கும். அதுவும் இந்த ரோட்டுக் கடையில் கிடைக்கும் நெத்திலி ஃப்ரையின் சுவை மிகவும் அருமையாகத்தான் இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த நெத்திலி ஃப்ரை ரோட்டு கடையின் சுவையிலேயே வீட்டில் எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
இந்த நெத்திலி மீனை குழம்பு வைத்துச் சாப்பிடலாம், தொக்கு செய்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு பிடிக்கின்ற வகையில் எண்ணெயில் பொரித்து நெத்திலி ஃப்ரை செய்து சாப்பிடலாம். நெத்திலி மீன் பொடிசாக இருந்தாலும் அதன் சுவை திமிங்கலம் போன்றது. இதில் குழம்பு செய்வதைக் காட்டிலும் இப்படி வறுத்துப் பாருங்கள். இந்த சுவை உங்கள் நாவை விட்டு நீங்காது.
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை நெத்திலி மீன் வாங்கினால் மிஸ் பண்ணமாக இப்படி வறுவல் செஞ்சி பாருங்கள்!
Ingredients
Method
முதலில் நெத்திலி மீனை நன்கு தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
பின் சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலியுடன் எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை, கரம் மசாலா தூள், மல்லி தூள், மிளகாய்த்தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஊற வைத்துள்ள நெத்திலி மீனை எடுத்து நாம் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்துள்ள நெத்திலி மீனை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான ரோட்டுக்கடை நெத்திலி ஃப்ரை தயார்.






