இந்த சண்டே ஸ்பெஷலாக ருசியான சிக்கன் ரோல் வீட்டிலயே இதே போல செஞ்சி பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

- Advertisement -

சிக்கனில் செய்யக்கூடிய எல்லாமே எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். சிக்கன் பிரியாணி சிக்கன் கிரேவி செட்டிநாடு மிளகு சிக்கன் 65 அப்படின்னு சிக்கன் வச்சு செய்யக்கூடிய பலவிதமான உணவு எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுலயும் குழந்தைகளுக்கு சொல்லவே தேவையில்லை சாப்பாடு வேண்டாம்னு சொல்ற குழந்தைகள் கூட சிக்கன் கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட்டான ஒன்னு தான் சிக்கன்.

-விளம்பரம்-

 சிக்கன் மட்டும் எப்படி செஞ்சாலும் சுவை அருமையா தான் இருக்கும். ஆனா அதுலயே டிஃபரண்டா செஞ்சா சொல்லவா வேணும் இன்னும் சுவை அள்ளும். சிக்கனை இட்லி தோசை சாதம் சப்பாத்தி இந்த மாதிரி உணவுகளோடு வைத்து சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ மாலை நேரத்துல சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ்க்கு சிக்கனை வச்சு ஒரு டிஃபரண்டான ரோல் பண்ண போறோம்.

- Advertisement -

இந்த சிக்கன் ரோல் கடைகள்ல கிடைக்கிற மாதிரி ரொம்ப சூப்பரா செய்யலாம் ‌. அதுவும் ரொம்பவே ஈஸியான முறையில் செஞ்சு முடிச்சிடலாம். மாலை நேரத்துல டீ காபி குடிக்கும் போது அப்படியே இந்த சிக்கன் ரோலையும் ஒரு கடி கடிச்சா அமிர்தமா இருக்கும். அந்த மாதிரியான ஒரு அருமையான ஈஸியான சிக்கன் ரோல் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
5 from 1 vote

சிக்கன் ரோல் | Chicken Roll Recipe In Tamil

சிக்கன் மட்டும் எப்படி செஞ்சாலும் சுவை அருமையா தான் இருக்கும். ஆனா அதுலயே டிஃபரண்டா செஞ்சா சொல்லவா வேணும் இன்னும் சுவை அள்ளும். சிக்கனை இட்லி தோசை சாதம் சப்பாத்தி இந்த மாதிரி உணவுகளோடு வைத்து சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ மாலை நேரத்துல சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ்க்கு சிக்கனை வச்சு ஒரு டிஃபரண்டான ரோல் பண்ண போறோம்.
இந்த சிக்கன் ரோல் கடைகள்ல கிடைக்கிற மாதிரி ரொம்ப சூப்பரா செய்யலாம் ‌. அதுவும் ரொம்பவே ஈஸியான முறையில் செஞ்சு முடிச்சிடலாம். மாலை நேரத்துல டீ காபி குடிக்கும்போது அப்படியே இந்த சிக்கன் ரோலையும் ஒரு கடி கடிச்சா அமிர்தமா இருக்கும். அந்த மாதிரியான ஒரு அருமையான ஈஸியான சிக்கன் ரோல் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time15 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Chicken Roll
Yield: 4
Calories: 381kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ எலும்பு இல்லாத சிக்கன்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1/4 டீஸ்பூன் சாட் மசாலா
  • 150 கிராம் மைதா மாவு
  • கொத்தமல்லி இலைகள் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  •  
    முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை சேர்த்து அதன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.மாவு காயாமல் இருக்க சிறிதளவு எண்ணெயை அதன் மேல் தடவி ஊற வைக்க வேண்டும்
  • எடுத்து வைத்துள்ள சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் சில துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் அந்த சிக்கனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவேண்டும்.
  • சிக்கன் ஊறிய பிறகு அதனை ஒரு கடாயில் போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் மிளகாய் தூள் மல்லித்தூள் சாட் மசாலா மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அதனை வேக வைக்க வேண்டும்
  • சிக்கன் நன்றாக வெந்த பிறகு அதன் மேல் கொத்தமல்லி இலைகளை போட்டு இறக்க வேண்டும்.
  • பிசைந்து வைத்துள்ள மைதா மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தேய்த்து தோசை கல்லில் போட்டு சப்பாத்தி போன்று சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்..தயார் செய்து வைத்துள்ள சிக்கனை அந்த சப்பாத்தி போட்டு ரோல் மாதிரியாக உருட்டி வைத்தால் சுவையான சிக்கன் ரோல் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 381kcal | Carbohydrates: 3g | Protein: 21g | Fat: 1g | Sodium: 6mg | Potassium: 709mg | Fiber: 12g | Calcium: 2mg