வார ராசிபலன் 8 டிசம்பர் 2024 முதல் 15 டிசம்பர் 2024 வரை!!

மேஷம் இந்த வாரம் நினைத்த காரியத்தை நிறைவேற்ற புதுப்புது செயல்களில் ஈடுபடுவீர்கள். போட்டியாக இருந்த நபர்களை ஓவர் டேக் செய்து வியாபாரத்தை பெருக்குவீர்கள். அரசியல்வாதிகள் மிகுந்த செல்வாக்கு அடைவார்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.சொத்து பிரச்சனைகள் சாதகமாக முடியும். நேற்

By ·

மேஷம்

இந்த வாரம் நினைத்த காரியத்தை நிறைவேற்ற புதுப்புது செயல்களில் ஈடுபடுவீர்கள். போட்டியாக இருந்த நபர்களை ஓவர் டேக் செய்து வியாபாரத்தை பெருக்குவீர்கள். அரசியல்வாதிகள் மிகுந்த செல்வாக்கு அடைவார்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.சொத்து பிரச்சனைகள் சாதகமாக முடியும். நேற்று நெருக்கடியை ஏற்படுத்தி வந்த பிரச்னை விலகும். தடைபட்ட வருமானம் வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பணியாளர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

ரிஷபம்

இந்த வாரம் அடுத்தவரின் ஆலோசனையை அதிகம் கேட்க வேண்டாம். பங்குச்சந்தை வியாபாரங்களில் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். சுப காரிய நிகழ்ச்சிகள் நினைத்தபடி நடக்கும். பெண்களால் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வீடு கட்டுவதற்கான முயற்சியை தொடங்குவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல செய்தி மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். புத்திசாலித்தனத்தால் நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.

மிதுனம்

இந்த வாரம் அரசாங்க காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புதிய வேலை வாய்ப்புகள் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் நீங்கும். இரவு நேர பயணங்களில் மூலம் தொழிலுக்கு தேவையான உதவிகளை பெறுவீர்கள். உங்கள் வார்த்தையால் மற்றவரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். ஒரு சிலருக்கு தேவையற்ற பழிச்சொல் உண்டாகும். செய்து வரும் தொழிலில் புதிய முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசிக்கவும்.

கடகம்

இந்த வாரம் திடீர் பண வரவு உண்டாகும். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமாக நடக்கும். ஆன்மீகப் பெரியவர்களின் ஆசியால் நல்லது நடக்கும். பிள்ளைகளால் கல்வி செலவு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் எச்சரிக்கை தேவை. பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.

சிம்மம்

இந்த வாரம் உங்கள் முயற்சிகளுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுவார்கள். தவறான ஆலோசனையின் மூலம் நஷ்டம் ஏற்படுத்த பார்ப்பார்கள். அறிவுக் கூர்மையால் வெற்றி பெறுவீர்கள். வாங்கிய நிலத்திற்கு பத்திரம் போடுவதில் இழுபறிநிலை உண்டாகும். பண விஷயத்தில் சிலர் உங்களை ஏமாற்ற நினைக்கலாம். எடுத்த வேலையை முடிக்கும் நோக்கில் செயல்படுவீர். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும். வெள்ளிக்கிழமை அமைதி காப்பது நல்லது.

கன்னி

இந்த வாரம் விட்டதை பிடிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியோடு இரவு பகலாக பாடுபடுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வீர்கள். கமிஷன் வியாபாரம் நல்ல பலனை கொடுக்கும். வேலை இடத்தில் மேல் அதிகாரிகளின் கோபத்தால் மனம் வருத்தப்படுவீர்கள். பெரிய மனிதர்கள் தொடர்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். அரசு வழி முயற்சி சாதகமாகும்.

துலாம்

இந்த வாரம் காதலியின் கோபத்தால் மனம் சங்கடப்படுவீர்கள். மனைவிக்கு தேவையான காரியங்களை கடன் வாங்கி நிறைவேற்றுவீர்கள். திருமண வாய்ப்புகள் தள்ளிப் போகலாம். கணவன் மனைவி உறவில் கசப்பு மேலோங்கும். தொழில் நிமித்தமாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு வியாபாரத்திற்கு தேவையான உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். வேலை தேடியவர்களுக்கு நல்ல செய்தி வரும்.

விருச்சிகம்

இந்த வாரம் வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். தொழிலில் கடுமையை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ஊழியர்களின் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. மனதில் பட்டதை வெளியில் கொட்டி விடுவீர்கள். அதனால் உங்களுக்கு கெட்ட பெயர் உண்டாகும். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். முகநூல் பெண் நண்பர்களிடம் ரகசியங்களை வெளிப்படுத்தாதீர்கள். அது தேவையில்லாத அவமானத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

தனுசு

இந்த வாரம் வியாபாரத்தில் லாபம் பெருகும் வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். பின்னர் நிறைவேற்ற முடியாமல் முழிக்காதீர்கள். கெட்டது செய்ய நினைப்பவர்கள் இந்த நேரத்தில் நல்லது செய்ய தூண்டப்படுவார்கள். புதிய கடைகள் திறப்பீர்கள். வியாபாரத்திற்கு தேவையான உதவி வெளியூரிலிருந்து கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். நீங்கள் நினைத்ததை நடத்தி முடிப்பீர். பொருளாதார நிலை உயரும்.

மகரம்

இந்த வாரம் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சனை உண்டாகும். சகோதர சகோதரிகள் வகையில் அனாவசியமான செலவுகள் ஏற்படும். விரோதிகள் வேரோடு அழிந்து போவார். விவசாய தொழிலில் மனம் ஈடுபடும். உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சனை உண்டாகும். சகோதர சகோதரிகள் வகையில் அனாவசியமான செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்கள் ஆதரவால் சில நல்ல காரியங்கள் நடக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கும். ஒரு சிலர் புதிய இடம், வீடு என வாங்குவீர்கள்.

கும்பம்

இந்த வாரம் தொழிலுக்காக வங்கியில் கேட்ட கடன் தடையின்றி கிடைக்கும். அதன் மூலமாக வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் இருந்த குறைகளை நுணுக்கமாக களைந்து எடுப்பீர்கள். மறைந்திருந்த திறமை வெளிப்படும். முடங்கியிருந்த தொழில் இயங்கும். எதிர்ப்பு விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். போட்டி பந்தயங்களில் உங்களுக்குத் தான் வெற்றி கிடைக்கும். பங்குச்சந்தை வியாபாரம் படுஜோராக நடக்கும். அரசு தனியார் துறை ஊழியர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இந்த வாரம் வழக்கறிஞர்கள், கல்லூரி விரிவுரையாளர்களுக்கு பொற்காலம். பெரியவர்களின் வருகையால் வீட்டில் மங்கள நிகழ்சிகளுக்கான வழித்தடம் அமையும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கி மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். வாத திறமையால் சில சிக்கலான பிரச்சனைகள் இருந்து விடுபடுவீர்கள். பிடிவாதகமாக இருந்து நினைத்ததை சாதிப்பீர்கள். திடீர் பணவரவு உண்டாகி மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும்.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சி – 2025 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை