கடன் சுமை தீர செய்ய வேண்டிய தீப வழிபாடு!!

கடன் என்ற வார்த்தையை கேட்டாலே ஒரு சிலருக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் நிறைய கஷ்டத்திற்கு உள்ளாக கூடிய பல பிரச்சனைகளையும் இந்த கடன் கொடுக்கும். சில சமயத்தில் கடவுள் நமக்கு பல பிரச்சனைகளை கடன் மூலமாக கொடுப்பதாக மிகவும் வருத்தத்தில் இருப்போம் ஆனால் அந்த அனைத்து பிரச்சினைகளிலிருந்தும

By Prem Kumar · 28/9/2025

கடன் என்ற வார்த்தையை கேட்டாலே ஒரு சிலருக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் நிறைய கஷ்டத்திற்கு உள்ளாக கூடிய பல பிரச்சனைகளையும் இந்த கடன் கொடுக்கும். சில சமயத்தில் கடவுள் நமக்கு பல பிரச்சனைகளை கடன் மூலமாக கொடுப்பதாக மிகவும் வருத்தத்தில் இருப்போம் ஆனால் அந்த அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விடுபட வேண்டும் என்றால் நாம் ஜோதிட ரீதியாக சில பரிகாரங்களை செய்ய வேண்டும். குபேரர் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து ஆக்ரோஷமான பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியவர் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர் எனவே குபேரர் நமக்கு சந்தோஷமாக பணத்தை கொடுத்தாலே நமக்கு இருக்கக்கூடிய அனைத்து கடன் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.

பணக்கஷ்டத்தை தீர்க்கக் கூடிய விளக்கு

வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு தொண்ணையில் பச்சரிசி நெல் வாங்கி வைக்க வேண்டும். தொன்னையில் வைப்பதை விட வெள்ளி கிண்ணத்தில் நெல்லை வைப்பது மிகவும் நல்லது. சந்திர பகவானுக்கு உரிய தானியம் என்பதால் மிகவும் விசேஷமானது. ஒரு மண்ணை அகல் விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்று அந்த நெல் வைத்திருக்கக்கூடிய சின்னத்திற்கு பக்கத்திலேயே தீபத்தை வடமேற்கு திசை நோக்கி வைக்க வேண்டும்.

கடன் சுமை படிப்படியாக குறையும்

தினமும் காலை எழுந்து பரிகாரத்தை தீபம் ஏற்றி வைத்து குலதெய்வத்தையும் சந்திர பகவானையும் குபேரரையும் நினைத்து ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றி வைத்த பிறகு இரண்டு நிமிடம் கண்களை மூடி வழிபாடு செய்ய வேண்டும் அப்படி செய்தால் பணம் மூலமாக வரக்கூடிய கஷ்டங்கள் வரவே வராது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தானியங்களை மாற்றி வைக்க வேண்டும் பழைய தானியங்களை பறவைகளுக்கு இரையாக போட்டு விட வேண்டும் மறுபடியும் புதிதாக நெல் வாங்கி வைக்க வேண்டும் பூஜை அருகில் நெல் இருந்தால் அந்த வீட்டில் அனைத்து விஷயங்களுமே விசேஷமானதாக இருக்கும்.

விளக்கு ஏற்ற வேண்டிய கால அளவு

இந்த விளக்கை தொடர்ந்து 48 நாட்கள் காலை எழுந்ததும் ஏற்றி வர வாய்ப்பு இரு நல்ல மாற்றம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக நல்ல மாற்றம் இருக்கும் இதனை அப்படியே கூட தினமும் தொடர்ந்து இயற்றிய வாழ்க்கை மாறிவிடும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க இது ஒரு நல்ல பரிகாரம். இந்த பரிகாரத்தை தினமும் செய்யலாம் சந்திர பகவானுக்கு உரிய திங்கட்கிழமை இருந்து தொடங்கினால் மிகவும் சிறப்பானது.

இதனையும் படியுங்கள் : கடன் தொல்லைகள் நீங்கி வருமானம் பெருக வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் மட்டும் போது!

Recipes AMP · Quick view
View full