கை நிறைய பணம் கிடைக்க செய்ய வேண்டிய தீப வழிபாடு!
என்னதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது கையில் இருக்கக்கூடிய பணத்தை பொறுத்தேன் நமக்கான இன்ப துன்பங்களும் மரியாதையும் நிர்ணயிக்கப்படும் அந்த வகையில் எதிர்பார்க்காமல் சில சூழ்நிலைகள் வரும்போது கையில் பணம் இல்லாத சூழலில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். நம
என்னதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது கையில் இருக்கக்கூடிய பணத்தை பொறுத்தேன் நமக்கான இன்ப துன்பங்களும் மரியாதையும் நிர்ணயிக்கப்படும் அந்த வகையில் எதிர்பார்க்காமல் சில சூழ்நிலைகள் வரும்போது கையில் பணம் இல்லாத சூழலில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். நம்முடைய கையில் பணம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தீப வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும்.
பண வீண் விரயம்
பணவரவை அதிகரிப்பதற்கு பரிகாரங்கள் இருந்தாலும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருப்பதற்கு சில பரிகாரங்கள் உள்ளது என்னதான் நம் கையில் பணம் இருக்கிறது என்று மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்த பணம் சீக்கிரத்திலேயே செலவாகிவிடும் இல்லை என்றால் வீண் விரயம் ஆகிவிடும். பணம் வீண் விரயம் ஆகாமல் இருப்பதற்கு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு தீபம் ஏற்ற வேண்டும். தீபத்தை வெள்ளிக்கிழமை தோறும் தான் ஏற்ற வேண்டும்.
தீபம் ஏற்றும் முறை
தீபம் ஏற்றுவதற்கு நமக்கு வெள்ளை நிற காட்டன் துணி தேவைப்படும் பன்னீரும் தேவைப்படும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் காட்டன் துணியை நன்றாக நனைத்து அதனை பிழியாமல் அப்படியே காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்ததும் அதனை எடுத்து அதிலிருந்து இரண்டு திரிகளை வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் வெள்ளி விளக்கு இருந்தால் அந்த விளக்கில் பசு நெய் ஊற்றி இரண்டு திரிகளையும் ஒன்றாக திரித்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை மகாலட்சுமி தயாரிக்கும் முன்பாக மட்டுமே ஏற்ற வேண்டும் ஏற்றும்போது ஏதாவது ஒரு மந்திரத்தையோ ஸ்லோகத்தையோ சொல்லலாம் ஏதாவது ஒரு இணைப்பை நெய்வேதியம் ஆக வைத்து மலர்களால் அர்ச்சனை செய்யலாம். இந்த பன்னீர் தீபத்தை மகாலட்சுமி தாயாருக்கு ஏற்றி வழிபாடு செய்யும்போது நம் கையில் நிறைய பணம் தங்கும். முழு மனதோடு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.
தீபம் ஏற்ற வேண்டிய நேரம்
தொடர்ச்சியாக 16 வெள்ளிக்கிழமை தீபம் ஏற்ற வேண்டும் ஒரு வாரம் விட்டால் கூட மறுபடியும் 16 வாரங்கள் தொடர்ச்சியாக ஏற்றலாம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். இந்த விளக்கை காலை 6:00 மணியிலிருந்து ஏழு மணிக்குள் சுக்கிர ஹோரையில் ஏற்றுவது மிகவும் நல்லது முடியாதவர்கள் மாலை நேரத்திலும் ஏற்றலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் எவ்வளவு பணம் கஷ்டம் இருந்தாலும் தீர்ந்து பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த ஒரு விளக்கு போதும்!