வெற்றி கிடைக்க ஏற்ற வேண்டிய தீபம்!
வெற்றி தோல்வி இரண்டுமே ஒருவருக்கு வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அனைவருக்கும் மிகவும் சுலபமாக தோல்வி கிடைத்துவிடும் ஆனால் வெற்றி என்பது நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோமோ அதை பொறுத்து தான் கிடைக்கும் ஒரு சிலருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் வெற்றி என்பது மிகவும் தூரத்திலேயே இருக
வெற்றி தோல்வி இரண்டுமே ஒருவருக்கு வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அனைவருக்கும் மிகவும் சுலபமாக தோல்வி கிடைத்துவிடும் ஆனால் வெற்றி என்பது நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோமோ அதை பொறுத்து தான் கிடைக்கும் ஒரு சிலருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் வெற்றி என்பது மிகவும் தூரத்திலேயே இருக்கும் அப்படி இருந்தால் அதற்கு ஒரு எளிமையான தீப வழிபாட்டை மேற்கொண்டு பாருங்கள்.
போட்டிகள்
வாழ்க்கையில் நாம் எந்த ஒரு விஷயத்தில் காலடி எடுத்து வைத்தாலும் அதில் நமக்கு பல போட்டிகள் இருக்கும் அந்த போட்டிகளை எல்லாம் வென்று தான் நாம் வாழ்க்கையில் பயணம் செய்ய வேண்டும் வேலை செய்பவர்களுக்கு கை நிறைய சம்பளம் வேண்டும் வேலையில் முன்னேற்றம் வேண்டும் என்ற லட்சியம் இருக்கும் குடும்ப பொறுப்புகளை சுமப்பவர்கள் பொருளாதார ரீதியாக உயர வேண்டும் என்று நினைப்பார்கள் எதையாவது ஒன்றை வாழ்கையில் சாதித்து காட்ட வேண்டும் என்று ஒரு சிலர் இருப்பார்கள் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார்கள் அனைவருக்குமே வாழ்க்கையில் போட்டி என்பது இருந்து கொண்டே தான் இருக்கும் எனவே அவரவர்களுடைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு வெற்றியை நோக்கி முயற்சி செய்து கொண்டு தான் இருக்க வேண்டும்
மரத்தடி பிள்ளையார்
வெற்றிப் பாதைகளில் ஒரு சிலர் தோல்வியை கண்டு துவண்டு விடுவார்கள் ஆனால் தோல்வியை பார்த்து துவளாமல் அடுத்தடுத்த நிலைக்கு செல்வதற்கு தெய்வத்துடைய அருள் நிச்சயமாக வேண்டும் என்னதான் நாம் திறமையால் முயற்சி செய்து கொண்டே இருந்தாலும் தெய்வத்தின் அருள் இல்லை என்றால் நம்மால் எதையுமே செய்ய முடியாது தெய்வத்துடைய முழு அருள் கிடைக்க வேண்டும் என்பதே ஒரு எட்டாக்கனியாகத்தான் இருக்கும் அதனால் நீங்கள் நினைத்தது அனைத்தும் நடப்பதற்கு சனிக்கிழமை தோறும் அரச மரத்தடி பிள்ளையார் கோவிலுக்கு போக வேண்டும்
ஏற்ற வேண்டிய தீபம்
அரச மரத்தடி பிள்ளையார் கோவிலுக்கு சென்று ஒன்பதாவது விளக்குகளில் எண்ணெய் ஊற்றி இரட்டை திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். அங்கேயே அமர்ந்து நன்றாக மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு 9 பேனா கல்வாங்கி அங்கு வரும் மாணவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் அவர்களுடைய பேனாக்களில் இருக்கும் மை தீர்ந்து போவதற்குள் ஏதாவது ஒரு விஷயத்தில் நீங்கள் முயற்சி செய்யும் விஷயத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் இந்த எளிமையான பரிகாரத்தை வாரந்தோறும் வரக்கூடிய சனிக்கிழமையில் தொடர்ந்து ஒன்பது வாருங்கள் செய்து பாருங்கள் இடையில் இந்த பரிகாரத்தை நிறுத்தவே கூடாது. பெண்கள் மட்டும் மாதவிடாய் காலத்தில் செய்யாமல் மற்ற நாட்களில் இதனை தொடர்ந்து செய்யலாம் விடாமுயற்சியோடு இதனையும் செய்து பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : உங்கள் வருமானம் உயர்ந்து பணம் பெருகி கொண்டே இருக்க! இந்த முறை படி தீபம் ஏற்றி பாருங்கள்!