உங்கள் வருமானம் உயர்ந்து பணம் பெருகி கொண்டே இருக்க! இந்த முறை படி தீபம் ஏற்றி பாருங்கள்!

- Advertisement -

பொதுவாக நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்கள் தெய்வங்களுக்கு உகந்த நாள் என்று நாம் குலதெய்வம், இஷ்ட தெய்வம் என அனைவருக்கும் இரு நாட்களில் நம் வீட்டு பூஜை அறையிலோ அல்லது நேரடியாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரங்கள் செய்து தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்வோம். ஆனால் வாரத்தின் ஏழு நாட்களில் ஒவ்வொரு தெய்வத்துக்கு உகந்த நாளாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அந்தந்த கிழமைகளில் அந்த தெய்வங்களுக்கு ஏற்ற தீபம் ஏற்றினால் அனைவரும் உங்களுக்கு அருள் புரிவார்கள். நீங்கள் வாழ்வின் உச்சத்தையே தொடலாம். உங்களிடம் இருந்து இல்லை என்ற ஒரு சொல்லே வராது அந்த அளவிற்குஉங்களுக்கு வாரி வழங்குவார்கள். அதனால் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்வதற்கு எந்த நாள் எந்த தெய்வத்திற்கு உகந்த நாள் என்பதனை இந்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

ஞாயிறு

ஞாயிற்றுகிழமை அன்று ஐயப்பனை வேண்டி தாமரைப்பூ அமைப்பில் தேங்காய எண்ணெய் ஊற்றி 100 தீபங்கள் ஏற்றுவது சிறப்பானதாக இருக்கும். இப்படி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த தீபம் ஏற்றி ஐயப்பனை வழிபட்டு வந்தால் உங்கள் வருமானம் அதிகரித்து வீட்டில் செல்வம் பெருகும்.

- Advertisement -

திங்கள்

திங்கட்கிழமை அன்று அன்னப்பச்சிகள் கோலமிட்டு இலுப்பை எண்ணெயை கொண்டு 56 தீபங்கள் அன்னப்பேச்சி வடிவத்தில் ஏற்றுவது சிறப்பானதாக இருக்கும். இப்படி நாம் தீபம் ஏற்றும் போது வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும்.

செவ்வாய்

செவ்வாய்க்கிழமை அன்று அரிசி மாவை வைத்து இரட்டை கிளி கோலம் போட்டு அதன் மேல் பசு நெய் ஊற்றி 54 தீபங்களை வரிசையாக ஏற்றினால் சிறப்பானதாக இருக்கும் இப்படி தீபம் ஏற்றுவதன் மூலமாக கணவன் மனைவி இருவருக்கும் தாம்பத்திய உறவு சிறப்பாக அமையும்.

புதன்

புதன்கிழமை அன்று அரிசி மாவை பயன்படுத்தி இரட்டை சங்கு கோலம் வரைந்து அதனை சுற்றி 23 தீபங்கள் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது சிறப்பானதாக இருக்கும். இப்படி நாம் தீபம் ஏற்றும்போது நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் மந்த புத்தி நீங்கும்.

-விளம்பரம்-

வியாழன்

வியாழன் கிழமை அன்று அரிசி மாவை பயன்படுத்தி சுதர்சன சக்கரம் கோலம் போட்டு அதனை சுற்றி தேங்காய் எண்ணெய் ஊற்றி 57 தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால். பகை உணர்வுடன் இருக்கும் உறவினர்களின் பகை உணர்வு குறைந்துவிடும்.

வெள்ளி

வெள்ளிக்கிழமை அன்று பருப்பு மத்தால் கடைந்து எடுத்த வெண்ணெயை காய்ச்சி நெய் ஊற்றி மூன்று உள்வட்டமாக சுற்றி அறுபது தீபங்கள் ஏற்றுவது சிறப்பாக இருக்கும். இதனால் வீட்டில் நீங்கள் செய்யும் தேவையற்ற செலவுகள் குறைந்து. வீட்டில் ஊதாரி தனமா சுற்றிக் கொண்டிருந்த ஆன்கள் ஒரு நிதானத்திற்கு வருவார்கள்.

சனி

சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் ஊற்றி 80 தீப விளக்குகள் ஏற்றுவது சிறப்பானதாக இருக்கும். இப்படி சனிக்கிழமையில் 80 தீபம் ஏற்றி வழிபடுவதால் பித்ருக்களின் சாபம் நீங்கி குடும்பம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற தொடங்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here