பண வசியம் ஏற்பட ஏற்ற வேண்டிய தீபம்!!

கார்த்திகை தீபத்தன்று நாம் வீட்டில் ஏற்றக்கூடிய தீபத்தில் தெய்வத்தை காண முடியும் நாம் தீபம் ஏற்றுவதற்கான காரணம் கூட தீப ஒளியில் தெய்வத்தை காண்பதற்காகத்தான். விபத்தின் வலிகள் தெய்வம் வீற்றிருப்பதாக ஐதீகம் உள்ளது ஆகையால் நாம் செய்யக்கூடிய அனைத்து வகைப்பாடுகளிலும் தீபம் ஏற்றுவது தான

By ·

கார்த்திகை தீபத்தன்று நாம் வீட்டில் ஏற்றக்கூடிய தீபத்தில் தெய்வத்தை காண முடியும் நாம் தீபம் ஏற்றுவதற்கான காரணம் கூட தீப ஒளியில் தெய்வத்தை காண்பதற்காகத்தான். விபத்தின் வலிகள் தெய்வம் வீற்றிருப்பதாக ஐதீகம் உள்ளது ஆகையால் நாம் செய்யக்கூடிய அனைத்து வகைப்பாடுகளிலும் தீபம் ஏற்றுவது தான் மிகவும் முக்கியமான ஒன்று. அத்தகைய தீபத்திற்கே உரிய நாள்தான் கார்த்திகை தீபத்திருநாள். வீட்டில் பண வரவு அதிகரிப்பதற்கு நாம் ஏற்றும் தீபத்திற்கு அடியில் ஒரு பொருளை வைக்க வேண்டும் அது என்ன பொருள் எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றுவதற்கென ஒரு முறையே உள்ளது. நீங்கள் ஏற்றும் விளக்குகள் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் ஒற்றைப்படையில் தான் விளக்கு ஏற்ற வேண்டும். நிறைய விளக்குகள் ஏற்றினால் அதற்கான பலன்களும் பெருகிக்கொண்டே இருக்கும். குத்துவிளக்கு ஏற்றும் போதும் ஐந்து முகத்தில் தான் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

உப்பு தீபம்

வீட்டு ஐந்து முகத்தில் உள்ள குத்து விளக்கை ஏற்றுவதால் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகத்தை பெற முடியும். மேலும் விளக்கு ஏற்றும் போது எத்தனை அகல் விளக்கு ஏற்றினாலும் அதற்கு அடியில் உப்பு வைத்து ஏற்றலாம். ஒரு சிறிய தட்டு வைத்து அதன் மேல் கல் உப்பை பரப்பி அதன் மேல் அகல் விளக்கை திருப்பி வைத்து அதன் மேல் ஒரு அகல் விளக்கு வைத்து எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். நேரடியாக உப்பின் மேலாக விளக்கு வைத்து தீபம் ஏற்றக்கூடாது.

உப்பு தீபத்தின் நன்மைகள்

இந்த உப்பு தீபத்தை வீடு முழுவதும் ஏற்ற முடியவில்லை என்றால் வீட்டில் நிலை வாசல் சமையலறை பூஜை அறை என மூன்று இடங்களில் மட்டுமாவது ஏற்ற வேண்டும். இது வீட்டிற்கு செல்வ செழிப்பை ஏற்படுத்தக் கூடியது அதுமட்டுமில்லாமல் பணவரவையும் அதிகரித்து கொடுக்கக் கூடியது. பணம் இல்லை என்று சொல்லாத அளவிற்கு வீட்டில் பணம் பெருகிக்கொண்டே இருக்கும். வீட்டில் செல்வ செழிப்பும் மகிழ்ச்சியும் தாண்டவம் ஆடும். முழு மனதோடு இந்த கார்த்திகை தீபத்திருநாள் அன்று இந்த உப்பு தீபத்தை ஏற்றிப் பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : கார்த்திகை மாத வளர்பிறை தீப வழிபாடு!

Recipes AMP · Quick view
View full