Advertisement
அசைவம்

திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி வீட்டில இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

ஒரே மாதிரியான பிரியாணி வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் அரேபியன் சிக்கன் மந்தி பிரியாணி இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி| Dindugul Thalappakatti Chicken Briyanai in Tamil

Print Recipe
ஒரே மாதிரியான பிரியாணி வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword dindugal thalappakati chicken biriyani, திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Total Time 35 minutes
Servings 4 people
Calories 1460

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 500 kg சீரக சம்பா அரிசி
  • 500 kg சிக்கன்
  • 3 பட்டை
  • 4 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 கல்பாசி
  • 4 முந்திரி
  • 1 வெங்காயம்
  • 4 சின்ன வெங்காயம்
  • 1 இஞ்சி
  • 5 பச்சை மிளகாய்
  • 10 சிறு துண்டுபூண்டு
  • கொத்தமல்லி இலை சிறிதளவு
  • புதினா சிறிதளவு
  • ½ tsp சீரகம்
  • 2 tsp மல்லி
  • ½ tsp மிளகு
  • ¾ tsp சோம்பு
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • ½ tsp மிளகாய் தூள்
  • 2 tbsp தயிர்
  • நெய்
  • தேவையான அளவு தண்ணீர்                     
    Advertisement
  • உப்பு சிறிதளவு

Instructions

  • தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி செய்ய முதலில் சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.
  • பின் மிக்ஸி ஜாரில் மல்லி, மிளகு, சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கல்பாசி, முந்திரி பருப்பு ஆகியவற்றை நன்றாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து தனியா எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பின்னர் மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பச்சை
    Advertisement
    மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை, புதினா ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் குக்கர் நெய் ஊற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் சின்ன வெங்காய கலவையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
  • கலவை நன்றாக வதங்கியதும் சிக்கனை போட்டு பிரட்டி எடுத்து அதில் அரைத்த மசாலா தூளை சேர்க்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
  • பின்னர் தயிர் சேர்த்து சிறிது நேரம் என்னை பிரியும் வரை மூடி வைக்க வேண்டும்.
  • எண்ணெய் பிரிந்து வந்ததும் கலவையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.குக்கரில் 3 விசில் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பின் கறி வெந்ததும் அது நன்றாக கழுவிய அரிசியை சேர்க்க வேண்டும். உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் பிரியாணிக்கு தேவையான தண்ணீரை ஊற்ற வேண்டும்.
  • பின்னர் குக்கரை மூடி வைத்து 15 நிமிடம் தீயை இதமான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி தயார்.

Nutrition

Serving: 1025gm | Calories: 1460kcal | Carbohydrates: 155g | Protein: 100g | Fat: 47g | Saturated Fat: 8.5g | Polyunsaturated Fat: 20g | Monounsaturated Fat: 14.5g | Trans Fat: 0.6g | Sodium: 2095mg | Potassium: 2308mg | Fiber: 7g | Sugar: 16g | Calcium: 130mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பிரெஞ்ச் ப்ரைஸ் மாதிரி கேரட் ப்ரைஸ் என்று ஒரு தடவை அசத்துங்க!

இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…

48 நிமிடங்கள் ago

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…

54 நிமிடங்கள் ago

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்!!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

1 மணி நேரம் ago

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

5 மணி நேரங்கள் ago

ரொம்பவே சிம்பிளான ஒரு வர மிளகாய் துவையல் எப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

வீட்டில் வேலை பார்த்து பார்த்து ரொம்ப சலிச்சு போனவங்க இட்லி தோசைக்கு பேச எந்த சட்னியும் அரைக்காமல் இந்த மாதிரி…

5 மணி நேரங்கள் ago

ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுவென்ற இந்த நெத்திலி மீன் ஃப்ரை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் வறுவல் செய்வீர்கள்!!

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை…

6 மணி நேரங்கள் ago