- Prep
- 15 min
- Cook
- 20 min
- Total
- 35 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
ஒரே மாதிரியான பிரியாணி வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் அரேபியன் சிக்கன் மந்தி பிரியாணி இப்படி செஞ்சி பாருங்க!
செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி செய்ய முதலில் சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.
பின் மிக்ஸி ஜாரில் மல்லி, மிளகு, சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கல்பாசி, முந்திரி பருப்பு ஆகியவற்றை நன்றாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து தனியா எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை, புதினா ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கர் நெய் ஊற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் சின்ன வெங்காய கலவையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
கலவை நன்றாக வதங்கியதும் சிக்கனை போட்டு பிரட்டி எடுத்து அதில் அரைத்த மசாலா தூளை சேர்க்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் தயிர் சேர்த்து சிறிது நேரம் என்னை பிரியும் வரை மூடி வைக்க வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் கலவையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.குக்கரில் 3 விசில் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் கறி வெந்ததும் அது நன்றாக கழுவிய அரிசியை சேர்க்க வேண்டும். உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் பிரியாணிக்கு தேவையான தண்ணீரை ஊற்ற வேண்டும்.
பின்னர் குக்கரை மூடி வைத்து 15 நிமிடம் தீயை இதமான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி தயார்.






