தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவானால் இனி இந்த ராசிகளுக்கு வெற்றிகள் குவியும்!!

ஜோதிடத்தில், கர்மாவிற்கு ஏற்ற பலனைக் கொடுக்கும் சனி பகவான் நீதிக்கடவுளாக கருதப்படுகிறார். கடந்த ஆண்டு கும்பத்தில் சனி பெயர்ச்சி ஆன நிலையில், கடந்த 2024 ஜூன் 29ம் தேதி வக்ர பெயர்ச்சி அடைந்துள்ள சனி பகவான், நவம்பர் 15ம் தேதி வக்ர நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைவார். தீபாவளிக்கு

By ·

ஜோதிடத்தில், கர்மாவிற்கு ஏற்ற பலனைக் கொடுக்கும் சனி பகவான் நீதிக்கடவுளாக கருதப்படுகிறார். கடந்த ஆண்டு கும்பத்தில் சனி பெயர்ச்சி ஆன நிலையில், கடந்த 2024 ஜூன் 29ம் தேதி வக்ர பெயர்ச்சி அடைந்துள்ள சனி பகவான், நவம்பர் 15ம் தேதி வக்ர நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைவார். தீபாவளிக்கு பின் நடக்கும் சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகமான நற்பலன்கள் இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். யார் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு தீபாவளிக்குப் பிந்தைய காலம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. சனி வக்ர நிவர்த்தி வியாபாரத்தில் அபரிமிதமான லாபத்தை அள்ளிக்கொடுக்கும். சனி பகவானின் அருளால் வணிகர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் நிலுவையில் உள்ள பணிகளில் இப்போது வெற்றி கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு, சனி பெயர்ச்சி மங்களகரமானதாகவும், நன்மைகளை அளிக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது. வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். வியாபாரம் வேகமாக முன்னேறும். வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தீபாவளியன்று சில நல்ல செய்திகள் கிடைக்கும், இதனால் அவர்களின் பதற்றம் நீங்கும். குழந்தைகள் மூலம் பல நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

கன்னி

தீபாவளிக்குப் பிறகு, சனி வக்ர நிவர்த்தி கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும். தீபாவளிக்குப் பின் வரும் காலம் நிதி ரீதியாக லாபகரமானதாக இருக்கும். கிரக நிலைகளின் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு தீபாவளி முதல் தொடர்ந்து பல நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக ஒரு இடத்தில் சிக்கி இருந்த பணம் திரும்பக் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

மகரம்

சனி வக்ர நிவர்த்தி மகர ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். தீபாவளிக்கு பிறகு சனியின் வக்ர நிவர்த்தியால் வாழ்க்கையில் சிறப்பான மாற்றம் ஏற்படும். கணவன்-மனைவி இடையே பரஸ்பர புரிதல் இருக்கும், இது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் மனம் மகிழ்ச்சியாய் இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சனியின் வக்ர நிவர்த்தியால் அதிக பலன் அடைவார்கள். சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசியில் ஷஷ ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகத்தின் பல சுப பலன்கள் கிடைக்கும். சனி பகவானின் அருள் கிட்டும். முன்பு செய்த முதலீடுகள் மூலம் இந்த நேரத்தில் பலன் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியே செல்ல வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க நினைத்தால், அதற்கு இது நல்ல நேரமாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வார்கள். கடினமாக உழைத்து இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். மீன ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் அலுவலகத்தில் பல வித அனுகூலமான நன்மைகள் ஏற்படும். வெளிநாட்டு பயணமும் செல்ல வாய்ப்புள்ளது. ஆடம்பர செலவுகள் செய்யும் அளவு பண வரவு அதிகமாகும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கப்படும்.

இதனையும் படியுங்கள் : சதயம் நட்சத்திரத்தில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்வதால் சுப பலன்களை பெறப்போக்கும் 6 ராசிகள்!

Recipes AMP · Quick view
View full