சனியால் தீபாவளியில் உச்சப் பெற போகும் ராசிகள் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு!

சனீஸ்வரர் என்றாலே அனைவருக்கும் பயம் தான் அதிலும் ஏழரை சனி வக்கிர சனி என்னும் பொழுது அனைவரும் உச்சகட்ட பயத்தில் இருப்பார்கள். சனி நமக்கு நன்மை செய்வாரா ? தீமை செய்வாரா ? என்று பலவாறு யோசிப்பார்கள். ஆனால் சனீஸ்வர பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப மட்டுமே பலனை கொடுக்கக் கூடியவர

By ·

சனீஸ்வரர் என்றாலே அனைவருக்கும் பயம் தான் அதிலும் ஏழரை சனி வக்கிர சனி என்னும் பொழுது அனைவரும் உச்சகட்ட பயத்தில் இருப்பார்கள். சனி நமக்கு நன்மை செய்வாரா ? தீமை செய்வாரா ? என்று பலவாறு யோசிப்பார்கள். ஆனால் சனீஸ்வர பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப மட்டுமே பலனை கொடுக்கக் கூடியவர். ஆகையால் சனீஸ்வர பகவானை எண்ணி பயம் கொள்ள தேவையில்லை. ஒரு ராசியில் அதிக காலம் தங்கி இருக்கக்கூடிய கிரகம் என்றால் அது சனி கிரகம் தான். அப்படி சனி கிரகம் ஒரு ராசியில் இரண்டரை வருட காலம் தங்கி இருக்கும். அப்படி இருக்கும் பொழுது அவர்களின் தசா புக்தி ஜாதக பலனின் படி அவர்களுக்கான பாதக சாதக பலன்கள் கிடைக்கும்.

இரண்டரை வருட காலங்கள் சனி கிரகம் ஒரு ராசியில் இருக்கும். மற்ற கிரகங்களை விட சனி கிரகம் மட்டுமே மிகவும் மெதுவாக பெயர்ச்சி அடையக் கூடிய கிரகமாகும். ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு செல்வதற்கு இரண்டரை வருட காலங்களை எடுத்துக் கொள்கிறார் சனீஸ்வர பகவான்.

இப்படி மெதுவாக செல்வதற்கு காரணமாக சனீஸ்வரனின் காலில் ஏற்பட்ட ஊனத்தை காரணமாக சொல்கிறார்கள். விநாயகப் பெருமானின் திருமுகத்தை காண அனைவரும் சென்ற பொழுது சனீஷ்வரருக்கு அழைப்பு விடுக்கபடவில்லையாம். இருந்தும் விநாயக பெருமானின் அழகிய வதனம் காண ஆசை கொண்டு சனீஸ்வரரும் சென்றாராம். சனீஸ்வரரின் பார்வை பட்டு தான் விநாயகரின் சிரம் துண்டிக்கப்பட்டதாக கருதும் தாய் பார்வதி சனீஸ்வரருக்கு சாபமிட்டதாக கூறுகிறார்கள்.

இப்படி இரண்டரை வருட காலங்கள் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் சனீஸ்வர பகவான் 140 நாட்கள் வக்கிரமடையும். இந்த வக்ர காலத்தில்  சனீஸ்வரனின் பார்வையால்  பாதிப்படைந்த ராசிக்காரர்கள் வக்ர சனி காலத்தில் பணக்கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு படிப்படியாக பணக்கஷ்டம் தீரும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் அகழும். பெரிய சிக்கலில் இருந்தவர்களுக்கெல்லாம் சங்கடங்கள் தீர்ந்து நிம்மதி கிடைக்கும். சனி கிரகத்தின் வக்கிரத்தால் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதால் நல்ல பலன் கிடைக்கும்.கிரகங்களினால் ராசிகளில் ஏற்படும் மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்களையும் தருகின்றன. அப்படி சனீஸ்வர பகவானின் மாற்றத்தால் பாதகம் பெறும் ராசிகளுக்கான பலன்களை பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மேம்படும். வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். தந்தையின் ஆதரவு பெருகும் . வரவை விட செலவு குறைவாகவே இருக்கும். நண்பர்களின் உதவியால் உத்தியோகங்களில் மாற்றம் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். கல்வி பணிகளில் வெற்றியும் பெறுவீர்கள். தொலைத்த பணத்தை மீட்கப்படலாம்.

ரிஷபம்

ரிஸப ராசியில் பிறந்தவர்கள் தொழில் நிலை மேம்படும். தொழிலில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். குடும்பத்தில் ஆன்மீக நிகழ்வுகள் நடைபெறும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மேம்படும் பணவரவு வாய்ப்புகள் அதிகம் உண்டு. கல்வி மற்றும் அறிவு சார்ந்த வேலைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தங்கள் பிள்ளைகளின் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். விட்டுப் போன நண்பர்களின் பழக்கங்கள் மீண்டும் கிடைக்கலாம். வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் உருவாக்கப்படும்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் வியாபாரத்தில் உயர்வு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை நிறைந்து இருப்பீர்கள். பரம்பரை சொத்துக்களை கிடைக்கும். கல்வி பணிகளில் வெற்றி பெறுவீர்கள். நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. புதிய வாகனங்கள் வாங்கும் வசதி ஏற்படும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை கூடும். வாகனங்கள் வாங்க வசதி கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. அறிவுசார் வேலையில் பணம் சம்பாதிக்கும் வழிமுறையாக மாறும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கலாம். மனைவியின் ஆதரவு கிடைக்கும். கல்வி பணி மேம்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு. உங்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் பணியில் நிலைமை மேம்படும். செலவுகள் குறையும். குடும்ப பிரச்சனைகள் தீரும். மனம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும். முழு நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். வருமானத்தை பெருக்கும் வழிமுறைகளில் மாற்றம் ஏற்படலாம். ஆராய்ச்சி பணிக்காக வெளிநாடும் செல்லும் வாய்ப்புகள் ஏற்படலாம். வெளிநாட்டு பயணங்கள் அல்லது பயணங்களால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் தேடி வரும். புதிய வாகனம் வாங்க வாய்ப்புகள் கிடைக்கலாம்.

இதனையும் படியுங்கள் : ராகு கேது பெயர்ச்சியால் அசுர வளர்ச்சி பெற போகும் அந்த 2 ராசிகாரர்கள் யார் ?

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை