Advertisement
சைவம்

ருசியான டிராகன் பன்னீர் லாலிபாப் இது போன்று வீட்டில் செய்து பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!

Advertisement

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பன்னீர் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு இன்று மாலை பன்னீர் லாலிபாப் செய்து கொடுங்கள். இவை அனைவருக்கும் பிடித்தவை, குறிப்பாக இந்திய-சீன உணவுகளை விரும்பும் அனைத்து உணவுப்பிரியர்களுக்கும். சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் அவற்றை உணவகங்களில் உள்ள சுவை போலவே வீட்டில் எளிதாக செய்யலாம்.

டிராகன் பன்னீர் லாலிபாப்|Dragon Paneer Lollipop Recipe in Tamil

Print Recipe
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பன்னீர் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு இன்று மாலை பன்னீர் லாலிபாப் செய்து கொடுங்கள். இவை அனைவருக்கும் பிடித்தவை, குறிப்பாக இந்திய-சீன உணவுகளை விரும்பும் அனைத்து உணவுப்பிரியர்களுக்கும். சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் அவற்றை உணவகங்களில் உள்ள சுவை போலவே வீட்டில் எளிதாக செய்யலாம்.
Course Breakfast, dinner
Cuisine Indian
Keyword Paneer
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 321

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பெரிய பவுள்

Ingredients

பன்னீரை உற வைக்க

  • 200 கிராம் பன்னீர்
  • உப்பு தேவையானஅளவு
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச்சாறு
  • 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில்
  • 1 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  • 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பச்சை மிளகாய்

கோட்டிங் செய்ய :

  • 1 கப் வேகவைத்த நூடுல்ஸ்
  • உப்பு தேவையானஅளவு
  • 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு

டிராகன் சாஸ் செய்ய :

  • 1 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு
  • 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் செஸ்வான்
  • 1 டீஸ்பூன் சோள
  • 1/4 டீஸ்பூன் உப்பு                             
  • 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை

Instructions

  • முதலில் பன்னீரை 12 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் பன்னீர் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, இதில் பன்னீர் துண்டுகளை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
  • சில குச்சிகளை எடுத்து அவற்றை ஒவ்வொரு பன்னிரண்டிலும் சொருகி விடவும்.
  • வேகவைத்த நூடுல்ஸ், சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி உதிரியாக எடுத்துக் கொள்ளவும். நூடுல்ஸ்ஸை கையில் எடுத்து பன்னீர் துண்டுகளின் மேல் சுற்றிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான சூட்டில் இருக்கும் பொழுது நூடுல் சுற்றியுள்ள பன்னீர் லாலிபாப்களை எண்ணெயில் சேர்த்து இரண்டு நிமிடம் பொரித்து எடுக்கவும்.
  • ஒரு பேனை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து இதில் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • பின்னர் அதில் சிறிது வெள்ளை எள் சேர்க்கவும். அத்துடன் செஸ்வான் சாஸ் சேர்த்து கிளறவும்.
  • பின்பு அதில் சிறிது சோள மாவு மற்றும் தண்ணீரை கரைத்து இதில் சேர்க்கவும் கூடவே உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • கலவை கெட்டியானதும் பொரித்து வைத்துள்ள லாலிபாப் களை இதில் போட்டு இரண்டு பக்கமும் மெதுவாக திருப்பி போட்டு மசாலா முழுவதும் பன்னீரில் ஒட்டிய உடன் அடுப்பை அணைத்து சூடாகப் பரிமாறவும்.

Nutrition

Serving: 400g | Calories: 321kcal | Carbohydrates: 3.6g | Protein: 25g | Fat: 25g | Saturated Fat: 18g | Cholesterol: 29mg | Sodium: 18mg | Sugar: 3.6g | Calcium: 407mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

9 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

11 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

21 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago