வாழ்க்கையில் அதிர்ஷடம் வர போவதை முன்னக்கூடியே உணர்த்தும் கனவுகள் ? என்னெ்ன கனவுகள் தெரியுமா ?

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நம்மில் பலருக்கு பலவகையான கனவுகள் வரும். இருப்பினும் நாம் காணும் அனைத்து கனவுகளுக்கும் பலன் இருக்கும் என்று எளிதாக சொல்லிவிட முடியாது. கனவுகள் என்பவை நாம் நடக்கவேண்டுமென்று நினைப்பது மட்டுமல்ல, நாம் செய்யத் தவறியதாகவும், அதை அறியாமலும் கூட இருக

By Prem Kumar · 10/3/2024

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நம்மில் பலருக்கு பலவகையான கனவுகள் வரும். இருப்பினும் நாம் காணும் அனைத்து கனவுகளுக்கும் பலன் இருக்கும் என்று எளிதாக சொல்லிவிட முடியாது. கனவுகள் என்பவை நாம் நடக்கவேண்டுமென்று நினைப்பது மட்டுமல்ல, நாம் செய்யத் தவறியதாகவும், அதை அறியாமலும் கூட இருக்கலாம். கனவுகள் நமக்கு அவற்றை நினைவுபடுத்தலாம். சுருக்கமாக கனவுகள் ஒரு சம்பவத்தின், ஆசையின், உணர்வின் விளைவாகவும் இருக்கலாம், காரணமாகவும் இருக்கலாம்.

பகல் கனவு பலிக்காது அதே நேரத்தில் அதிகாலையில் காணும் கனவு நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிலருக்கு தினம் தினம் புதிது புதிதாக கனவு வரும். சிலருக்கு பெரும்பாலும் கெட்ட கெட்ட கனவுகள், அகோரமான பயங்கரமான கனவுகளும் வந்து அச்சுறுத்தும். என்ன மாதிரியான கனவுகள் வந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

கடவுள்கள் கனவில் வந்தால்

கடவுள்கள் நம் கனவில் வந்தால் அவர்களின் ஆசி நமக்கு உள்ளது என்று அர்த்தம். அதிலும் ராஜா அலங்காரத்தில் இருக்கும் முருகன், குபேரர், லட்சுமி, பெருமாள், நம் கனவில் வந்தால் நமக்கு பணவரவு வரப்போகிறது என்றும் நாம் செய்து கொண்டிருக்கும் தொழிலில் லாபம் வரப்போகிறது என்றும் அர்த்தம். அதிலும் சிவபெருமானை நம் கனவில் கண்டால் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடையப் போகிறோம் என்று அர்த்தம்.

கோவில் கோபுரத்தை கனவில் கண்டால்

கோவில் கோபுரத்தை நம் கனவில் கண்டால் நம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையப் போகிறோம் என்றும் ஏதோ ஒரு வழியில் அதிர்ஷ்டத்தை பெறப் போகிறோம் என்றும் அர்த்தம். கோவில் மணியோசை கனவில் கேட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று அர்த்தம்.

பெரியவர்கள் ஆசீர்வதிப்பது போல் கனவில் கண்டால்

பெரியவர்கள் ஆசிர்வதிப்பதை போலவும் அல்லது கடவுள்கள் ஆசீர்வதிப்பை போலவும் கனவுகள் வந்தால் யோகம் நம்மை தேடி வரப்போகிறது என்று அர்த்தம். வேலையில் உயர்வு, புதிய வேலை, அல்லது அரசாங்க வேலை கிடைக்கப் போவதை இந்த கனவுகள் உணர்த்துகின்றன.

முன்‌பின் தெரியாத பெண்ணை கனவில் கண்டால்

பொதுவாக பெண்களை லட்சுமி தேவியின் அடையாளம் என்று கூறுவார்கள். அப்படி இருக்கையில் முன்பின் தெரியாத பெண்ணை கனவில் கண்டாலோ, அல்லது ஒரு பெண் மகிழ்ச்சியாக இருப்பதைப் போன்று நம் கனவில் கண்டாலோ நமக்கு லட்சுமி தேவியின் அருள் இருக்கிறது என்று அர்த்தம். அவரின் அருளால் செல்வங்கள் கிடைக்கப் போகின்றன என்று அர்த்தம்.

பறவைகளை கனவில் கண்டால்

பறவைகளை கனவில் கண்டால் செல்வம் வளம் வரப்போகிறது என்று அர்த்தம். அதிலும் குறிப்பாக நாரை மற்றும் மீன் கொத்தி போன்ற பறவைகளை நம் கனவில் கண்டால் அதிர்ஷ்ட காத்து நம் பக்கம் வீச இருக்கிறது என்று அர்த்தம்.

நெல்லிக்காய் மற்றும் தாமரையை கனவில் கண்டால்

நெல்லிக்காய் மற்றும் தாமரை பூவை கனவில் கண்டால் அடுத்த ஓரிரு நாட்களில் நமக்கு பணவரவு வரப்போகிறது என்று அர்த்தம். அது மட்டுமல்லாமல் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற போகின்றது என்று நமக்கு உணர்த்துகிறது.

விவசாயிகளை கனவில் கண்டால்

பொதுவாக விவசாயிகள் நிஜத்தில் மட்டுமல்ல நம் கனவில் வந்தாலும் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்ய இருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படிப்பட்ட விவசாயிகள் நிலத்தில் இருப்பது போல் கனவு வந்தால் சமூகத்தில் நல்ல அந்தஸ்துக்கு வரப் போகிறோம் என்று அர்த்தம்.

தங்கம் வாங்குவது போல் கனவு வந்தால்

தங்கம் வாங்குவது போல் கனவு வந்தாலோ அல்லது விளக்கு ஏற்றுவது போல் கனவு வந்தாலோ நீங்கள் மிகப்பெரிய அசையா சொத்து வாங்க போகிறீர்கள் என்று அர்த்தம்.

பசு கனவில் வந்தால்

பசு கனவில் வந்தால் லட்சுமி தேவியே நம் கனவில் வந்துள்ளார் என்று அர்த்தம். பசுவிடமிருந்து பால் கறப்பது போன்றோ அல்லது பால் கறப்பதை வேடிக்கை பார்ப்பது போன்றோ, கனவுகள் வந்தால் அது செல்வத்தை தான் குறிக்கிறது. யானையை கனவில் கண்டால் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு வரப்போகிறது என்று அர்த்தம். வெள்ளை குதிரையை கனவில் கண்டால் வளமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

இதனையும் படியுங்கள் : இவ்வளவு நாட்கள் வாடகை கொடுத்தது போதும்! சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் இதை செய்யுங்கள் போதும்!

Recipes AMP · Quick view
View full