Advertisement
அசைவம்

கல்யாண வீட்டு சுவையில் முருங்கக்காய் கார குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

நாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பு வகை என்றால் அது கார குழம்பு தான். ஆனால் நம் வீட்டில் செய்யும் கார குழம்பு அல்லது கடைகளில் ரெடிமேட் ஆக பாக்கெட்டுகளில் விற்கும் கார குழம்புகளை சாப்பிடுவதற்கு பரிமாறினால் பெரிதாக ஒன்றும் சாப்பிட மாட்டார்கள்.

இதையும் படியுங்கள் : சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

ஆனால் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளில் மற்றும் கல்யாண வீடுகளில் வைக்கும் கார குழம்பு என்றால் மட்டும் ஏன் என்று தெரியவில்லை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இன்று இது மாதிரியான சுவையில் நாம் இந்த குழம்பை செய்யலாம். நான் இருக்கும் போது உங்களுக்கு ஏன் இந்த கவலை இன்று கல்யாண வீடுகளில் வைப்பது போன்று சுவையான கார குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் பார்க்கலாம் வாருங்கள். ஆனால் நாம் சமைக்க போவது முருங்கக்காய் கார குழம்பு.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

முருங்கக்காய் கார குழம்பு | Drumstick Kara Kulambu Recipe in Tamil

Print Recipe
நாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பு வகை என்றால் அது கார குழம்பு தான். ஆனால் நம் வீட்டில் செய்யும் கார குழம்பு அல்லது கடைகளில் ரெடிமேட் ஆக பாக்கெட்டுகளில் விற்கும் கார குழம்புகளை சாப்பிடுவதற்கு பரிமாறினால் பெரிதாக ஒன்றும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளில் மற்றும் கல்யாண வீடுகளில் வைக்கும் கார குழம்பு என்றால் மட்டும் ஏன் என்று தெரியவில்லை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இன்று இது மாதிரியான சுவையில் நாம் இந்த குழம்பை செய்யலாம். நான் இருக்கும் போது உங்களுக்கு ஏன் இந்த கவலை இன்று கல்யாண வீடுகளில் வைப்பது போன்று சுவையான கார குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் பார்க்கலாம் வாருங்கள். ஆனால் நாம் சமைக்க போவது முருங்கக்காய் கார குழம்பு
Course Kulambu
Cuisine Indian, TAMIL
Keyword Drumstick Kara Kulambu, முருங்கக்காய் கார குழம்பு
Prep Time 20 minutes
Cook Time 30 minutes
Total Time 50 minutes
Servings 4 PERSON
Calories 64

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

வறுத்து அரைக்க

  • 1 tbsp எண்ணெய்
  • பட்டை சிறிதளவு
  • 2 கிராம்பு
  • 6 வர மிளகாய்
  • 1 tbsp மல்லி
  • 1 tbsp மிளகு
  • 1 tbsp உளுந்தம் பருப்பு
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 tbsp சீரகம்
  • 1 tbsp சோம்பு
  • புளி நெல்லிக்காய் அளவு
  • ½ கப் துருவிய தேங்காய்

கார குழம்புக்கு

  • 2 முருங்கக்காய் நறுக்கியது
  • 1 tbsp கடுகு
  • ½ tbsp சீரகம்
  • 1 tbsp உளுந்தம் பருப்பு
  • 5 பல் பூண்டு
  • கருவேப்பிலை சிறிது
  • 7 சின்ன வெங்காயம்
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 2 தக்காளி நறுக்கியது
  • ½ கப் தண்ணீர்
  • கொத்த மல்லி சிறிது

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சிறிது அளவில் பட்டை, கிராம்பு, வர மிளகாய், மல்லி, மிளகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும்.
  • நாம் வறுக்கும் பொருட்கள் சிவந்து வரும் நேரத்தில். அதனுடன் சீரகம், சோம்பு, சிறிதளவிலான புளியை துண்டு துண்டாக போட்டு நன்றாக வறுக்கவும். பின் இதனுடன் துருவிய தேங்காயையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • நாம் வறுத்து எடுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு குளிர வையுங்கள்,
    Advertisement
    குளிர்ந்த உடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்பு இரண்டு பெரிய அளவு முருங்கக்காய் துண்டு துண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி வெட்டிய முருங்கைக்காயை அதில் போட்டு பத்து நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • பின் காடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு போட்டு நன்றாக தாளிக்கவும். அதன்பின் இதனுடன் சிறிதளவு கருவேப்பிலை, நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • பின்பு இதற்கு அடுத்தாற் போல் சின்ன வெங்காயம் மற்றும் வெட்டி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். நாம் போட்ட வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • பின் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும், தக்காளி நன்றாக மசிந்து வந்ததும். நாம் வறுத்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின் பச்சை வாடை போனவுடன் அரைக் கப் தண்ணீர் ஊற்றவும்
  • அதன் பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.ஒரு ஐந்து நிமிடம் குழம்பு கொதித்தவுடன் அதில் நம் வெட்டி வைத்திருக்கும் முருங்கைக்காயை போட்டு கிளறி விடவும்.
  • பின் குழம்பு நன்றாக கொதித்து வந்தவுடன் நாம் சிறிது சிறிதாக வெட்டி வைத்திருக்கும் கொத்தமல்லியை சேர்த்து குழம்பை இறக்கி விடவும்.அவ்வளவு தான் முருங்கைக்காய் கார குழம்பு இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4person | Calories: 64kcal | Carbohydrates: 8.2g | Protein: 9g | Fat: 1.4g | Vitamin C: 51.7mg | Iron: 4mg

English Overview: Drumstick kara kulambu is one of the most important dishes in south india. Drumstick kara kulambu recipe or Drumstick kara kulambu seivathu eppadi or Drumstick kara kulambu recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

30 நிமிடங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

2 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

5 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

5 மணி நேரங்கள் ago

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

6 மணி நேரங்கள் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

8 மணி நேரங்கள் ago