- Prep
- 20 min
- Cook
- 30 min
- Total
- 50 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Kulambu
நாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பு வகை என்றால் அது கார குழம்பு தான். ஆனால் நம் வீட்டில் செய்யும் கார குழம்பு அல்லது கடைகளில் ரெடிமேட் ஆக பாக்கெட்டுகளில் விற்கும் கார குழம்புகளை சாப்பிடுவதற்கு பரிமாறினால் பெரிதாக ஒன்றும் சாப்பிட மாட்டார்கள்.
இதையும் படியுங்கள் : சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி ?
ஆனால் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளில் மற்றும் கல்யாண வீடுகளில் வைக்கும் கார குழம்பு என்றால் மட்டும் ஏன் என்று தெரியவில்லை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இன்று இது மாதிரியான சுவையில் நாம் இந்த குழம்பை செய்யலாம். நான் இருக்கும் போது உங்களுக்கு ஏன் இந்த கவலை இன்று கல்யாண வீடுகளில் வைப்பது போன்று சுவையான கார குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் பார்க்கலாம் வாருங்கள். ஆனால் நாம் சமைக்க போவது முருங்கக்காய் கார குழம்பு.
அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க. 
English Overview: Drumstick kara kulambu is one of the most important dishes in south india. Drumstick kara kulambu recipe or Drumstick kara kulambu seivathu eppadi or Drumstick kara kulambu recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சிறிது அளவில் பட்டை, கிராம்பு, வர மிளகாய், மல்லி, மிளகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும்.
நாம் வறுக்கும் பொருட்கள் சிவந்து வரும் நேரத்தில். அதனுடன் சீரகம், சோம்பு, சிறிதளவிலான புளியை துண்டு துண்டாக போட்டு நன்றாக வறுக்கவும். பின் இதனுடன் துருவிய தேங்காயையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
நாம் வறுத்து எடுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு குளிர வையுங்கள், குளிர்ந்த உடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு இரண்டு பெரிய அளவு முருங்கக்காய் துண்டு துண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி வெட்டிய முருங்கைக்காயை அதில் போட்டு பத்து நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும்.
பின் காடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு போட்டு நன்றாக தாளிக்கவும். அதன்பின் இதனுடன் சிறிதளவு கருவேப்பிலை, நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்பு இதற்கு அடுத்தாற் போல் சின்ன வெங்காயம் மற்றும் வெட்டி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். நாம் போட்ட வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கிக் கொள்ளவும்.
பின் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும், தக்காளி நன்றாக மசிந்து வந்ததும். நாம் வறுத்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின் பச்சை வாடை போனவுடன் அரைக் கப் தண்ணீர் ஊற்றவும்
அதன் பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.ஒரு ஐந்து நிமிடம் குழம்பு கொதித்தவுடன் அதில் நம் வெட்டி வைத்திருக்கும் முருங்கைக்காயை போட்டு கிளறி விடவும்.
பின் குழம்பு நன்றாக கொதித்து வந்தவுடன் நாம் சிறிது சிறிதாக வெட்டி வைத்திருக்கும் கொத்தமல்லியை சேர்த்து குழம்பை இறக்கி விடவும்.அவ்வளவு தான் முருங்கைக்காய் கார குழம்பு இனிதே தயாராகிவிட்டது.





