முருங்கைக்காய் மோர் குழம்பு இந்த வெயிலுக்கு இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

வெயில் காலம் ஆரம்பிச்சுட்டாலே எல்லாருமே நிறைய தண்ணீர் குடிக்கணும். இளநீர் குடிக்கணும் தயிர் மோர் எல்லாமே அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பதான் உடல் சூடு பிடிக்காமல் குளிர்ச்சியாக இருக்கும். அந்த வகையில வெயில் காலத்துல அதிகமா செய்ற ஒரு குழம்பு அப்படினா அது மோர் குழம்பு. இந்த

By Prem Kumar · 24/3/2025

வெயில் காலம் ஆரம்பிச்சுட்டாலே எல்லாருமே நிறைய தண்ணீர் குடிக்கணும். இளநீர் குடிக்கணும் தயிர் மோர் எல்லாமே அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பதான் உடல் சூடு பிடிக்காமல் குளிர்ச்சியாக இருக்கும். அந்த வகையில வெயில் காலத்துல அதிகமா செய்ற ஒரு குழம்பு அப்படினா அது மோர் குழம்பு. இந்த மோர் குழம்பு பெரும்பாலும் நீர் காய்கறிகள் வைத்து செய்வோம். சுரைக்காய் வெள்ளரிக்காய் வெள்ளை பூசணிக்காய் வெண்டைக்காய் இதெல்லாமே வைத்து மோர் குழம்பு செய்வோம். ஆனா இன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமா முருங்கைக்காய் வைத்து ஒரு சூப்பரான முருங்கைக்காய் மோர் குழம்பு செய்யப்போறோம்.

இந்த முருங்கைக்காய் மோர் குழம்பு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுக்கு நம்ம ஒரு மசாலா தயார் பண்ணனும் அதுக்கு துவரம் பருப்பு, மல்லி விதைகள், சீரகம் இது எல்லாத்தையும் அரை மணி நேரம் ஊறவைத்து அதுக்கப்புறம் அரைத்து செய்தால் டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும். சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க இதுக்கு சைட் டிஷ் தேவைப்படாது. அவ்ளோ ருசியா இருக்கும். ருசியான இந்த முருங்கைக்காய் மோர் குழம்புக்கு எல்லாருமே விரும்பி ரெண்டு மூணு தடவை கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. வெறும் ஊறுகாய் இருந்தா கூட சூப்பரா சாப்பிடலாம்.

இது முருங்கைக்காய் சீசன் அதனால முருங்கைக்காய் வைத்து இந்த மோர் குழம்பு வைக்கும் போது அவ்ளோ சூப்பரா இருக்கும். சுவையான இந்த மோர் குழம்பு ரெசிபிக்கு சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே அடிமையாகிடுவாங்க. முருங்கைக்காய் உங்க வீட்ல நிறைய இருந்துச்சுன்னா அதை வச்சு புளிக்குழம்பு, காரக்குழம்பு, முருங்கைக்காய் கூட்டு, பொரியல் அப்படி செய்யாம வித்தியாசமா இந்த முருங்கைக்காய் மோர் குழம்பு ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான முருங்கைக்காய் மோர் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான சௌசௌ மோர்க்குழம்பு ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full