Home சைவம் வீடே மணக்க மணக்க ருசியான சௌசௌ மோர்க்குழம்பு ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

வீடே மணக்க மணக்க ருசியான சௌசௌ மோர்க்குழம்பு ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

பொதுவாக காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகளை தயார் செய்யலாம். அந்த வகையில் காய்கறிகளில் மிக எளிமையாக கிடைக்கக்கூடிய காய்கறியாக சௌ சௌ பார்க்கப்படுகின்றது. நீர் சத்து நிறைந்துள்ள சௌசௌ ரொம்ப சுவையானதொரு காய்கறி வகையாகும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீர்கடுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். இவை ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது. குறிப்பாக நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை உள்ளவர்கள் சௌசௌவை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. சௌசௌ வைத்து எப்போதும்போல சாம்பார், கூட்டு தான் வைக்கணுமா. கொஞ்சம் வித்தியாசமான வேறு ஏதாவது ரெசிபி இருக்குதா. ‌ அப்படின்னு நெனச்சா உங்களுக்கு இது ஒரு பெஸ்ட் ரெசிபி.

-விளம்பரம்-

ஆம் நாம் இன்று சௌசௌ வைத்து சுவையான மோர்க்குழம்பு எப்படி செய்வதென்று பார்க்க இருக்கின்றோம். மோர் குழம்பு மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவாகும், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏராளமான உள்ளூர் வேறுபாடுகளுடன். ஆனால் இந்த ‌மோர்க்குழம்பு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி சமையல் வகை. காரைக்குடி மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் மோர்க்குழம்பு புகழ்பெற்று விளங்குகிறது. நாம் தினசரி மசாலா நிறைந்த உணவு பொருட்களையும் குழம்புகளையும் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் மாதத்தில் சில நாட்களில் மசாலா பொருட்கள் இல்லாத ரசம், மோர் குழம்புகள் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடலாம்.

Print
1 from 1 vote

சௌசௌ மோர்க்குழம்பு | Chow Chow Mor Kulambu Recipe In Tamil

பொதுவாக காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகளை தயார் செய்யலாம். அந்த வகையில் காய்கறிகளில் மிக எளிமையாக கிடைக்கக்கூடிய காய்கறியாக சௌ சௌ பார்க்கப்படுகின்றது. நீர் சத்து நிறைந்துள்ள சௌசௌ ரொம்ப சுவையானதொரு காய்கறி வகையாகும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீர்கடுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். இவை ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது. குறிப்பாக நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை உள்ளவர்கள் சௌசௌவை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. சௌசௌ வைத்து எப்போதும்போல சாம்பார், கூட்டு தான் வைக்கணுமா. கொஞ்சம் வித்தியாசமான வேறு ஏதாவது ரெசிபி இருக்குதா. ‌அப்படின்னு நெனச்சா உங்களுக்கு இது ஒரு பெஸ்ட் ரெசிபி.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Chow Chow Mor Kulambu
Yield: 4 People
Calories: 91kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 சௌசௌ
  • 1/2 லி தயிர்
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு

அரைக்க :

  • 2 டீஸ்பூன் துவரம் பருப்பு
  • 2 டீஸ்பூன் பாசிப்பருப்பு
  • 2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 5 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 துண்டு இஞ்சி

தாளிக்க :

  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 4 வர ‌மிளகாய்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்

செய்முறை

  • முதலில் சௌசௌவை தோல் நீக்கி விட்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் சௌசௌ சேர்த்து வதக்கவும்.
  • பின் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் சௌசௌ நன்கு வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து விட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
  • குழம்பின் பச்சை வாசனை போனதும் தயிரை கடைந்து சேர்த்து குறைந்த தீயில் வைத்து ஓரங்களில் நுரைத்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான சௌசௌ மோர்க்குழம்பு தயார்.

செய்முறை குறிப்புகள்

  •  

Nutrition

Serving: 400g | Calories: 91kcal | Carbohydrates: 4.5g | Protein: 8g | Fat: 1g | Sodium: 4mg | Potassium: 125mg | Fiber: 1.7g | Vitamin A: 32IU | Vitamin C: 44.7mg | Calcium: 41mg | Iron: 2.1mg

இதனையும் படியுங்கள் : கேரட் மற்றும் சௌசௌ சேர்த்து கல்யாண வீட்டு கூட்டு இப்படி சுலபமாக செஞ்சி பாருங்க!