கமகமனு மொச்சை பயிறு மற்றும் காய்கறி கலந்த கருவாடு குழம்பு! இதன் வாசனைக்கே சோற்று பானை காலியாகும்!
கருவாட்டு குழம்பு என்றால் எப்போதும் சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவோம். அப்படிப்பட்ட கருவாட்டுக் குழம்பில் பல காய்கறிகளையும் மொச்சை பயிரையும் சேர்த்து சமைக்கும் பொழுது அதன் மனமே நமக்கு எப்பொழுதும் சாப்பிடும் இரண்டு ப்ளேட்டுகளை விட மூன்று நான்கு பிளேட்டுகள் என்று சாப்பிட தோன்றிக
கருவாட்டு குழம்பு என்றால் எப்போதும் சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவோம். அப்படிப்பட்ட கருவாட்டுக் குழம்பில் பல காய்கறிகளையும் மொச்சை பயிரையும் சேர்த்து சமைக்கும் பொழுது அதன் மனமே நமக்கு எப்பொழுதும் சாப்பிடும் இரண்டு ப்ளேட்டுகளை விட மூன்று நான்கு பிளேட்டுகள் என்று சாப்பிட தோன்றிக் கொண்டே இருக்கும் .
அப்படிப்பட்ட கருவாட்டுக் குழம்பை எப்படி சுவையாகவும் மணமாகவும் வைப்பது என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம். முன்பெல்லாம் கருவாட்டு குழம்பை தாளிப்பு கூட செய்யாமல் அப்படியே செய்து வைப்பார்களாம் அதில் தட்டி போடப்படும் பூண்டுகே அந்த குழம்பு அத்தனை வாசனையாகவும் மனதிற்கு திருப்தியை தரக்கூடிய அளவுக்கு உண்பதற்கு நம்மளை தூண்டிக்கொண்டே இருக்குமாம். அப்படிப்பட்ட கருவாட்டுக் குழம்பு எப்படி ருசியாக வைத்து உண்பதை என்பதை தெரிந்து கொள்வோம். கருவாடு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. ஒரு பதபடுத்தப்பட்ட உணவில் எப்படி நன்மைகள் இருக்கும் என்று அனைவரும் யோசித்துப் பார்ப்போம்.
ஆனால் கருவாடு என்பது உடலுக்கு அதிக அளவில் பால் சுரப்பிற்கு உதவுகிறது. ஆனால் யாருக்காவது அரிப்பு கரப்பான் போன்ற அலர்ஜிகள் இருப்பவர்கள் கருவாடு உண்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அலர்ஜி அரிப்பு கரப்பான் இருந்தால் கருவாடு ,கத்திரிக்காய் சாப்பிட கூடாது. அவை மேலும் அதிகபடுத்தி விடும்.இது உப்பில் பதப்படுத்தப்பட்ட உணவு என்பதால் இது மேலும் அலர்ஜியை அதிகப்படுத்தும்.
கடல் உணவுகள் அனைத்தும் உடலுக்கு ஊட்டச்சத்தையும் நன்மையையும் கொடுக்கக் கூடியவை என்றாலும் கடல் உணவுகளில் இருக்கும் சில அமிலங்கள் ஒவ்வாமையை கொடுக்க கூடியவை. ஆகையால் நாம் இன்னும் கடல் உணவுகளை சரியான முறையில் சுத்தம் செய்து உண்ணும் பொழுது அதை நமக்கு எந்த ஒரு ஒவ்வாமையையும் கொடுக்காது. சரி இப்பொழுது நாம் மொச்சை பயிறு மற்றும் பல காய்கறிகளை சேர்த்து கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.