கமகமனு மொச்சை பயிறு மற்றும் காய்கறி கலந்த கருவாடு குழம்பு! இதன் வாசனைக்கே சோற்று பானை காலியாகும்!

- Advertisement -

கருவாட்டு  குழம்பு என்றால் எப்போதும் சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவோம். அப்படிப்பட்ட கருவாட்டுக் குழம்பில் பல காய்கறிகளையும் மொச்சை பயிரையும் சேர்த்து சமைக்கும் பொழுது அதன் மனமே நமக்கு எப்பொழுதும் சாப்பிடும் இரண்டு ப்ளேட்டுகளை விட மூன்று நான்கு பிளேட்டுகள் என்று சாப்பிட தோன்றிக் கொண்டே இருக்கும் .

-விளம்பரம்-

அப்படிப்பட்ட கருவாட்டுக் குழம்பை எப்படி சுவையாகவும் மணமாகவும் வைப்பது என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம். முன்பெல்லாம் கருவாட்டு குழம்பை தாளிப்பு கூட செய்யாமல் அப்படியே செய்து வைப்பார்களாம் அதில் தட்டி போடப்படும் பூண்டுகே அந்த குழம்பு அத்தனை வாசனையாகவும் மனதிற்கு திருப்தியை தரக்கூடிய அளவுக்கு உண்பதற்கு நம்மளை தூண்டிக்கொண்டே இருக்குமாம். அப்படிப்பட்ட கருவாட்டுக் குழம்பு எப்படி ருசியாக வைத்து உண்பதை என்பதை தெரிந்து கொள்வோம். கருவாடு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. ஒரு பதபடுத்தப்பட்ட உணவில் எப்படி நன்மைகள் இருக்கும் என்று அனைவரும் யோசித்துப் பார்ப்போம்.

- Advertisement -

ஆனால் கருவாடு என்பது உடலுக்கு அதிக அளவில் பால் சுரப்பிற்கு உதவுகிறது. ஆனால் யாருக்காவது அரிப்பு கரப்பான்  போன்ற அலர்ஜிகள் இருப்பவர்கள் கருவாடு உண்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அலர்ஜி அரிப்பு கரப்பான் இருந்தால் கருவாடு ,கத்திரிக்காய் சாப்பிட கூடாது. அவை மேலும் அதிகபடுத்தி விடும்.இது உப்பில் பதப்படுத்தப்பட்ட உணவு என்பதால் இது மேலும் அலர்ஜியை அதிகப்படுத்தும்.

கடல் உணவுகள் அனைத்தும் உடலுக்கு ஊட்டச்சத்தையும் நன்மையையும் கொடுக்கக் கூடியவை என்றாலும் கடல் உணவுகளில் இருக்கும் சில அமிலங்கள் ஒவ்வாமையை கொடுக்க கூடியவை. ஆகையால் நாம் இன்னும் கடல் உணவுகளை சரியான முறையில் சுத்தம் செய்து உண்ணும் பொழுது அதை நமக்கு எந்த ஒரு ஒவ்வாமையையும் கொடுக்காது. சரி இப்பொழுது நாம் மொச்சை பயிறு மற்றும் பல காய்கறிகளை சேர்த்து கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Print
No ratings yet

கருவாடு குழம்பு | Dry Fish Gravy Recipe In Tamil

கருவாட்டு  குழம்புஎன்றால் எப்போதும் சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவோம். அப்படிப்பட்ட கருவாட்டுக் குழம்பில் பல காய்கறிகளையும் மொச்சைபயிரையும் சேர்த்து சமைக்கும் பொழுது அதன் மனமே நமக்கு எப்பொழுதும் சாப்பிடும் இரண்டு ப்ளேட்டுகளை விட மூன்று நான்கு பிளேட்டுகள் என்று சாப்பிட தோன்றிக் கொண்டே இருக்கும் . கடல் உணவுகள் அனைத்தும் உடலுக்கு ஊட்டச்சத்தையும் நன்மையையும் கொடுக்கக் கூடியவை என்றாலும் கடல் உணவுகளில் இருக்கும் சில அமிலங்கள் ஒவ்வாமையை கொடுக்க கூடியவை.. மொச்சை பயிறு மற்றும் பல காய்கறிகளை சேர்த்து கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Kulambu
Cuisine: tamil nadu
Keyword: Dry Fish Grav
Yield: 4
Calories: 569kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 எலுமிச்சை பழ அளவு புளி
  • 1 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • 1 கப் கருவாடு
  • 1 கப் மொச்சைபயிறு
  • 2 கத்திரிக்காய்
  • 1 வாழைக்காய்
  • 1 முருங்கைகாய்
  • 1 உருளைகிழங்கு
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 3 பூண்டு
  • 1 தக்காளி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் கருவாடை  நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இதில் மீன்களுக்கு எப்படி தேவையில்ல  உறுப்புகளை நீக்குவோமோ அதே போல் சுத்தம் செய்ய வேண்டும்.
  • பின் நீரில் நன்றாக கழுவி விட்டு மண் சட்டி அல்லது அலுமினிய சட்டியில் நீர் சேர்க்காமல் உரசி  பின் நீர் விட்டு கழுவ வேண்டும் . இப்படி ஒரு இரண்டு முறை சுத்தம் செய்தால் போதும்.
  • இப்படி சுத்தம் செய்ய காரணம் கருவாடில் ஏதும் தூசி அதிகபடியான உப்பு போன்றவைகளை நீக்கி விடும். சிலர் கருவாடுகளை கழுவிய பின் அரிசி கழைந்த நீர் அல்லது சூடான நீர் ஊற்றி வைப்பார்கள்.
  • கழுவிய கருவாடை எடுத்து தனியே வைத்து கொள்ள வேண்டும்.  ஒருகடாயை அடுப்பில் வைத்து மொச்சை பயிரை வறுத்து அவை நிறம் மாறியதும் நீர் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
  • புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். இந்த புளி கரைசலில் தகுழம்பு மிளகாய் தூள் , தக்காளி சேர்த்து பிசைந்து விடவும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைக்கவும்.
  • பிறகு காய்கறிகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயத்தை உரித்து வைத்து கொள்ளவும் பாதி பூண்டை தோல் உரித்து வைத்து கொள்ளவும். மீதியை தோல் உரிக்காமல் தனியாக  பிரித்து வைக்கவும்.  அடுப்பில்  வானெலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்,  உரித்தபூண்டு , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் மொச்சை பயிறு, கத்திரிக்காய், முருங்கைகாய் , வாழைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.பின் கரைத்து வைத்துள்ள குழம்பை வானெலியில் சேர்த்து கலந்து மூடி போட்டு வேக வைக்கவும். 
  • காய்கறிகள் நன்றாக வெந்தது குழம்பு சுண்ட ஆரம்பிக்கும் போது கருவாடை சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். மீதமுள்ள தோல் உரிக்காத பூண்டுகளை குழவி வைத்து தட்டி குழம்பில் சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும். மூடியை திறக்காமலே குழம்பை இறக்கி வைத்துவிடவும்.
  • பின் ஒரு தட்டில் சோறு போட்டு பின் குழம்பை திற்ந்தால்  குழம்பின்மணம் நாவில் நீர் சுரக்க வைக்கும்.
  • அப்படியே குழம்பை  கலந்துமொச்சை பயிறு காய்கறிகளோடு கருவாட்டையும் சேர்த்து சோறில் ஊற்றினால் நல்ல வாசனைமிக்க ருசியான  கமகம மொச்சைபயிறு  பலகாய்கறிகள் கலந்த கருவாடு குழம்பு  தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 569kcal | Carbohydrates: 56g | Protein: 1g | Sodium: 366mg | Potassium: 856mg | Calcium: 56mg