Advertisement
சைவம்

ரொம்ப இருமல் சளியா இருக்கா அப்போ சுக்கு குழம்பு வச்சு சாப்பிட்டு பாருங்க! சளி, இருமல் எல்லாம் பறந்து போகும்!

Advertisement

காரக்குழம்பு சாப்பிட்டு இருக்கோம். ஆனா இது என்ன சுக்கு குழம்பு அப்படின்னா எல்லாருக்கும் டவுட்டா இருக்கும். எல்லாருக்கும் இருமல் சளி வந்தால் ஹாஸ்பிடல் போகாம வீட்டுலையே முதல்ல வீட்டு வைத்தியம் செஞ்சு பார்ப்போம். அந்த வகையில் சளி இருமலுக்கு வீட்டு வைத்தியம் நிறைய இருக்கு. தூதுவளை கசாயம் ,வெற்றிலை கசாயம், சுக்கு காபி, மசாலா டீ, அப்படின்னு எக்கச்சக்கமான வீட்டு வைத்தியங்கள் இருக்கு. ஆனா ஒரு சிலர் இந்த கஷாயம் சாப்பிட கொஞ்சம் பயப்படுவாங்க.

காரணம் இதோட டேஸ்ட் நல்லாவே இருக்காது அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா இருமல் சளி நமக்கு சரியாகும் அப்படினா நம்ம ஏதாவது ஒரு வீட்டு வைத்தியம் செஞ்சு தானா ஆகணும். அந்த வகையில நல்லா காரசாரமா சுக்கு மிளகு எல்லாம் சேர்த்து வைக்கக்கூடிய மருந்து குழம்பான சுக்கு குழம்பு எப்படி செய்யறதுன்னு தான் பாக்க போறோம். இந்த சிக்கு குழம்பு நல்லா காரசாரமா வச்சு சாதத்தில் ஊற்றி கூடவே கொஞ்சம் நல்லெண்ணெய் அதிகமா சேர்த்து சாப்பிட்டா சளி இருமல் எல்லாம் ஒரே நாள்ல காணாம போயிடும்.

Advertisement

சாப்பிடவும் அருமையா இருக்கும் அதே நேரத்துல நம்ம உடம்பும் சீக்கிரத்திலேயே சரியாகிடும். இந்த மருந்து குழம்பான சுக்கு குழம்பு செய்வது ரொம்ப கஷ்டம் எல்லாம் கிடையாது. நம்ம வைக்கிற கார குழம்பு மாதிரியே தான் இந்த சுக்கு குழம்பும். இப்போ நம்ம சொல்ல போற இந்த பக்குவத்துல வச்சா டேஸ்ட் அருமையா இருக்கும் அதே நேரத்தில் நம்ம நெனச்ச மாதிரியும் குழம்பு நமக்கு கிடைக்கும்.

ரொம்ப தண்ணியா வைக்காம கொஞ்சம் கெட்டியாக வைத்து சாப்பிட்டால் சாதத்துல பிரட்டி சாப்பிடுவதற்கு ரொம்பவே சூப்பரா இருக்கும். இதுகூட கொஞ்சம் அப்பளம் இல்லனா வடகம் சேர்த்து சாப்பிட்டால் வேற எந்த சைடு டிஷ்ஷூம் தேவை இல்லை சூப்பரா ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிட்டு முடிச்சிடலாம். இந்த சூப்பரான காரசாரமான குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.

சுக்கு குழம்பு | Dry Ginger Kulambu Recipe In Tamil

Print Recipe
Advertisement
இதோட டேஸ்ட் நல்லாவே இருக்காது அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா இருமல் சளி நமக்கு சரியாகும் அப்படினா நம்ம ஏதாவது ஒரு வீட்டு வைத்தியம் செஞ்சு தானா ஆகணும். அந்த வகையில நல்லா காரசாரமா சுக்கு மிளகு எல்லாம் சேர்த்து வைக்கக்கூடிய மருந்து குழம்பான சுக்கு குழம்பு எப்படி செய்யறதுன்னு தான் பாக்க போறோம். இந்த சிக்கு குழம்பு நல்லா காரசாரமா வச்சு சாதத்தில் ஊற்றி கூடவே கொஞ்சம் நல்லெண்ணெய் அதிகமா சேர்த்து சாப்பிட்டா சளி
Advertisement
இருமல் எல்லாம் ஒரே நாள்ல காணாம போயிடும். இதுகூட கொஞ்சம் அப்பளம் இல்லனா வடகம் சேர்த்து சாப்பிட்டால் வேற எந்த சைடு டிஷ்ஷூம் தேவை இல்லை சூப்பரா ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிட்டு முடிச்சிடலாம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Sukku Kulambu
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 169

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • சுக்கு சிறிய துண்டு
  • 2 டீஸ்பூன் மிளகு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுந்து
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • சுக்கு மற்றும் மிளகை எண்ணெய் விடாமல் ஒரு கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் என்னை விட்டு கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வெங்காயத்தை முதலில் வதக்கிய பின்பு தக்காளியை போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு புளி கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்
  • 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து எண்ணெய் பிரிந்து வரும் போது அரைத்து வைத்துள்ள சுக்கு,மிளகு பொடியை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால் சுவையான சுக்கு குழம்பு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 169kcal | Carbohydrates: 163g | Protein: 19.87g | Sodium: 38mg | Potassium: 124mg

இதையும் படியுங்கள் : சுக்குவை மிஞ்சிய மருத்துவம் இந்த உலகில் இல்லை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சுக்கு தண்ணீர்!

Advertisement
Ramya

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

3 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

11 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

18 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago