சுக்குவை மிஞ்சிய மருத்துவம் இந்த உலகில் இல்லை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சுக்கு தண்ணீர்!

- Advertisement -

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்கிற பழமொழி சொல்லப்படுவதுண்டு. அதற்கு காரணம், அவ்வளவு மருத்துவ குணங்கள் சுக்கில் காணப்படுகின்றன. நன்றாக காய வைக்கப்பட்ட இஞ்சியை சுக்கு என அழைக்கிறோம். சுக்கு எளிதில் கெடாது. இதனால் உலர்ந்த இஞ்சியான சுக்கு என்பது இஞ்சியை விட அதிக நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம். சுக்கை மசாலாப் பொருளாகவோ மருந்தாகவோ அனைத்து பருவங்களிலும் பயன்படுத்தலாம்.

-விளம்பரம்-

சிலருக்கு நீண்டதூரப் பயணம் செய்வதால் தலைபாரம் ஏற்படும். தலையில் நீர் கோர்த்து இருந்தால், இரு புருவங்களுக்கு கீழ்ப்பகுதியில் வலி ஏற்படும். இதனை குணப்படுத்த சுக்கை உரசி அதில் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து தலையில் தடவினால் சிறிது நேரத்திலேயே நல்ல பலன் கிடைக்கும். தலையில் இருக்கும் நீரை உறிஞ்சும் சக்தி சுக்குக்கு உள்ளது.

- Advertisement -

செரிமானத்தை மேம்படுத்துகிறது

சுக்கு நம்முடைய செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இதில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. உடலின் நச்சு நீக்கியாக செயல்படும் திறன் கொண்டது சுக்கு. அஜீரண பிரச்சனை உள்ளவர்கள், காலையில் மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் சுக்கு நீர் பருகலாம். இது நமது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.

வயிறு எரிச்சலை குறைக்கிறது

சுக்கு காரத்தன்மை கொண்டது தான். ஆனால் வயிற்று எரிச்சலை குணப்படுத்தவும் செய்கிறது. சுக்கு தூள் கலவையை அதிகாலையில் எடுத்துகொள்வதன் மூலம் வயிறு எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இருமல் தொல்லை நீங்கும்

இருமலுக்கு சுக்கு பயன்படுத்தினால் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று பலரும் அறிந்ததே. அதிலும் அதனைக் கொண்டு தினமும் 2-3 முறை டீ போட்டு குடித்தால், தொல்லை தரும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் உலர்ந்த இஞ்சி பொடியை வெல்லத்துடன் கலது எடுக்கலாம். இது மூக்கில் வடியும் நீரையும் குணப்படுத்தவும் செய்யும்.

-விளம்பரம்-

வாய் துர்நாற்றத்தை போக்குகிறது

வாய்‌ துர்நாற்றம் உள்ளவர்கள் சுக்குப்பொடியை உப்புடன் சேர்த்து தினமும் காலையில் பற்களை விளக்கலாம். மேலும் ஈறுகளையும் இந்த பொடிக் கொண்டு மசாஜ் செய்தால் பல் கூச்சம், பற்சொத்தை ஏற்படாமல் தடுக்கும். பல் வலி குறையும்.

சுக்கு நீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சுக்கு நீர் உடலில் இருக்கும் கொழுப்புச்சத்தை குறைக்கிறதுவயிறு உபாதைகளை குறைக்கிறது.

ஜலதோஷத்தை உண்டு செய்யும் வைரஸ் கிருமிகளை தாக்குகிறது.

-விளம்பரம்-

சுக்கு பிரசவத்துக்குப் பிறகு தாய்மார்களுக்கு உண்டாகும் உடல் அசதியை குறைக்கும்.

வயிற்றுப்போக்கு குணப்படுத்தும்.

வாந்தி மற்றும் குமட்டலை போக்க உதவும்.

குளிர்ச்சியான தேகம் கொண்டவர்களுக்கு இது உதவும்.

சுக்கு கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் பாதுகாக்கிறது.

செரிமானப் பிரச்சனைகளை இல்லாமல் செய்துவிடுகிறது.

பிரசவக்காலத்தில் சிலருக்கு ஜன்னி என்னும் குளுமை கண்டுவிடக்கூடும். அப்படியான உடல் குளுமையை இல்லாமல் உடலை சீரான வெப்பநிலையில் கொண்டுவருகீறது.

குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்கவும் சுக்கு நீர் உதவுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் சுக்குநீரைக் குடிப்பதால் உடல் எடையைக் குறைக்கலாம்.

சுக்கு தண்ணீர் நல்ல ரத்த ஓட்டம் மற்றும் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. ​

சுக்கு தண்ணீர் காய்ச்சும் முறை

ஒரு லிட்டர் தண்ணீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடி சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற‌விட்டு குடிக்கவும். குழந்தைகளுக்கு இந்த தண்ணீர் கொடுப்பதாக இருந்தால் சுக்கு பொடி அளவை குறைத்து தண்ணீர் அதிகம் சேர்த்து கொடுக்க வேண்டும்.

சுக்கு பொடி தயாரிக்கும் முறை

நாட்டு மருந்துக் கடையிலிருந்து சுக்கை வாங்கி ஒரு நாள் முழுவதும் வெயிலில் உலர்த்தி விடுங்கள். மறுநாள் அதனை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். இதனை வெளியிலும் வைக்கலாம் அல்லது பிரிட்ஜிலும் வைக்கலாம் அது உங்கள் விருப்பம்.