Advertisement
காலை உணவு

காரசாரமான எக் கீமா தோசை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க ஜம்முனு இருக்கும்!

Advertisement

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை உணவு.

இதை வெகு எளிதாக செய்துவிடலாம். அதுமட்டுமின்றி தோசை உடல் பருமனை அதிகரிக்கும் பொருட்களையோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருட்களையோ கொண்டவை அல்ல. மேலும் இவை எளிமையான மற்றும் எளிதாக செய்து முடிக்க கூடிய ஒரு உணவு வகை. தோசையில் பல வகை உண்டு அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகுந்த சுவையான மற்றும் வித்தியாசமான எக் கீமா தோசை.

Advertisement

என்ன எக் கீமா தோசையா என்று நினைக்கிறீர்களா? ஆமாங்க. முட்டை வைத்து சுவையான தோசையை செய்து உங்கள் வீட்டு குட்டிஸ்களுக்கு சாப்பிட கொடுங்கள். பொதுவாக நம் காலை உணவாக சாதா தோசை அல்லது ரவை தோசையை தான் நம்மில் பல பேர் வழக்கமாக நம் குடும்பத்தினருக்கு செய்து கொடுத்து இருப்போம். நீங்கள் வழக்கமாக செய்யும் தோசைக்கு ஒரு நாள் விடுப்பு கொடுத்துவிட்டு, ஒரு மாறுதலுக்காக இந்த மிகுந்த சுவையான எக் கீமா தோசையை செய்து உங்கள் குடும்பத்தினரை மகிழ வையுங்கள். அவர்கள் நிச்சயமாக அசந்து போவார்கள். வழக்கமாக முட்டை வைத்து குழம்பு, குருமா, முட்டை சாதம் போன்றவையே அதிகமாக செய்து இருப்போம். ஆனால் இன்று முட்டை வைத்து மொறுமொறு தோசை செய்யலாமா!

எக் கீமா தோசை | Egg Keema Dosa Recipe In Tamil

Print Recipe
தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை உணவு. இதை வெகு எளிதாக செய்துவிடலாம். தோசையில் பல வகை உண்டு அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகுந்த சுவையான மற்றும் வித்தியாசமான எக் கீமா தோசை. என்ன எக் கீமா தோசையா என்று நினைக்கிறீர்களா? ஆமாங்க. முட்டை வைத்து சுவையான தோசையை செய்து உங்கள் வீட்டு குட்டிஸ்களுக்கு
Advertisement
சாப்பிட கொடுங்கள். நீங்கள் வழக்கமாக செய்யும் தோசைக்கு ஒரு நாள் விடுப்பு கொடுத்துவிட்டு, ஒரு மாறுதலுக்காக இந்த மிகுந்த சுவையான எக் கீமா தோசையை செய்து உங்கள் குடும்பத்தினரை மகிழ வையுங்கள்.
Course Breakfast
Cuisine Indian
Keyword Egg Keema Dosa
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 3 People
Calories 67

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 தோசை கல்

Ingredients

  • 2 கப் தோசை மாவு
  • 4 முட்டை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு

Instructions

  • முதலில் முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதன் வெள்ளை பகுதியை மட்டும் துருவி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். எல்லாம் வதங்கியதும் அதனுடன் துருவி வைத்துள்ள முட்டையை சேர்த்து வதக்கவும்.
  • பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி மாவை எடுத்து தடிமனாக தோசையாக ஊற்றி அதன் மேல் இந்த மசாலாவை வைத்து, சிறிது வெங்காயம், கொத்தமல்லி இலையையும் தூவி இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் சூடான முட்டை கீமா தோசை தயார். இதை அப்படியே சாப்பிடலாம் இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவைப்படாது.

Nutrition

Serving: 400g | Calories: 67kcal | Carbohydrates: 3.9g | Protein: 6g | Fat: 4.5g | Saturated Fat: 1.8g | Sodium: 24mg | Potassium: 138mg | Fiber: 2.6g | Vitamin A: 27IU | Vitamin C: 41mg | Calcium: 56mg | Iron: 9.1mg

இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு சூப்பரான கேரட் முட்டைகோஸ் ஊத்தப்பம் இப்படி செய்து பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நிமிடம் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

4 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

14 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

14 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

15 மணி நேரங்கள் ago