Advertisement
அசைவம்

ரோட்டு கடை ஸ்டைல் முட்டை கொத்து பரோட்டா இப்படி வீட்டிலயே செய்து பாருங்க!

Advertisement

முட்டை கொத்து பரோட்டா சுவையானது மற்றும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் இந்த முட்டை கொத்து பரோட்டா.

இதையும் படியுங்கள் : ஹோட்டல் சுவையில் நூல் பரோட்டா செய்வது எப்படி ?

Advertisement

இதை ரோட்டுக்கடை ஸ்டைலில் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என ஏனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இதை படித்து பார்த்து நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

முட்டை கொத்து பரோட்டா | Egg Kothu Parotta Recipe In Tamil

Print Recipe
முட்டை கொத்து பரோட்டா சுவையானது மற்றும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் இந்த முட்டை கொத்து பரோட்டா.இதை ரோட்டுக்கடை ஸ்டைலில் எப்படி வீட்டிலே செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword egg paratha, முட்டை பரோட்டா
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 10 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 5 பரோட்டா
  • 3 முட்டை
  • 2 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 தக்காளி
  • கருவேப்பிலை 15 இலைகள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி மிளகுத் தூள்
  • மஞ்சள் தூள் சிறிது
  • உப்பு தேவைக்கேற்ப
  • சிக்கன் குழம்பு மட்டன் குழம்பு

Instructions

  • முதலில் பரோட்டாவை சிறு சிறு துடுகளாக ஒன்றிரண்டாக பிய்த்துக்கொள்ளவும். தக்காளியை நசுக்கிக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு இரும்பு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், மிளகுத்தூள், சேர்த்து நன்கு வதக்கவும், பின் தக்காளி சேர்த்து நன்கு மசியும்மாறு வதாகவும்.
  • வதக்கிய பொருட்களின் நடுவில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • இறுதியாக சிக்கன்/மட்டன் குழம்பை ஊற்றி நன்கு கலக்கிக் கொள்ளவும்.
  • கடைசியாக பிய்த்து வைத்துள்ள பரோட்டாவை சேர்த்து கலக்கி இரண்டு இரும்பு கரண்டிகளை வைத்து பரோட்டாவை நன்கு கொத்திக் சூடாக பரிமாறவும்.

Nutrition

Carbohydrates: 45g | Fat: 7.5g | Cholesterol: 93mg | Sodium: 111mg | Potassium: 289mg | Fiber: 6.8g
Advertisement
Prem Kumar

Recent Posts

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

30 seconds ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

6 நிமிடங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

28 நிமிடங்கள் ago

குளு குளுனு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது…

3 மணி நேரங்கள் ago

புத-ஆதித்ய யோகம்… ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன்…

4 மணி நேரங்கள் ago

காலை உணவாக இந்த மென்மையான மலபார் முட்டை பரோட்டா செய்து பாருங்கள் சுவை மிகவும் அபாரமாக இருக்கும்!!

வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில்…

5 மணி நேரங்கள் ago