Advertisement
சைவம்

ருசியான முட்டை மசால் தோசை இப்படி செய்து பாருங்க! காரசாரமாக இருக்கும் இதன் ருசியே தனி தான்!

Advertisement

இன்று நாம் ஒரு அட்டகாசமான மற்றும் அற்புதமான சுவையில் இருக்கும் ஒரு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் வீட்டில் தோசை சுடும் பொழுது அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய முட்டை மசால் தோசை ரெசிப்பி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில்

இதையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான கருவேப்பிலை இட்லி பொடி செய்வது எப்படி ?

Advertisement

இது போன்று ஒரு முட்டை மசால் தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு வாய்க்கு ருசியாக இருக்கும் குறிப்பாக குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த சுவையான முட்டை மசால் தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

முட்டை மசால் தோசை | Egg Masal Dosai Recipe in Tamil

Print Recipe
நாம் வீட்டில் தோசை சுடும் பொழுது அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய முட்டை மசால் தோசை ரெசிப்பி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில் இது போன்று ஒரு முட்டை மசால் தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு வாய்க்கு ருசியாக இருக்கும் குறிப்பாக குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Masal Dosai, மசால் தோசை
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time
Advertisement
40 minutes
Servings 4 people
Calories 80

Equipment

  • 1 கடாய்
  • 1 தோசை கல்

Ingredients

  • 1 பெரிய பவள் தோசை மாவு
  • 2 tbsp எண்ணெய்
  • ½ tbsp கடுகு
  • 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 2 கொத்து கருவேப்பிலை பொடியாக நறுக்கியது
  • 1 தக்காளி நறுக்கியது
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp மல்லி தூள்
  • ½ tbsp மிளகாய் தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • 4 முட்டை
  • உப்பு தேவையான அளவு
  • ½ tbsp மிளகு தூள்
  • கொத்த மல்லி சிறிது

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் நன்கு காய்ந்து வந்தவுடன் அதில் கடுகு சேர்க்கவும் பின் கடுகு நன்றாக புரிந்து வந்தவுடன்.
  • பின்
    Advertisement
    இதனுடன் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கி விடுங்கள்.
  • அதன் பின் இதனுடன் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை இலைகள், பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
  • பின் நாம் சேர்த்த மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் இதனுடன் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுப் பொடி சேர்த்து முட்டை உதிரி உதிரியாக வரும் வரை கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடாகியதும் இரண்டு கரண்டி மாவை எடுத்து ஊற்றி தோசையை அதிகம் விரித்து விடாமல். பின் அதன் மேல் நாம் தயார் செய்து வைத்து இருக்கும் முட்டை மசாலாவை சேர்த்து.
  • பின் அதற்கு மேல் பொடியாக நறுக்கி வெங்காயம் சிறிது மற்றும் சிறிது கொத்தமல்லி தூவி தோசை கரண்டியால் மெதுவாக அமிக்கி விட்டு. பின் இருபுறமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான முட்டை மசால் தோசை தயாராகி விட்டது.

Nutrition

Serving: 200gram | Calories: 80kcal | Carbohydrates: 18g | Protein: 13g | Fat: 4g | Saturated Fat: 1.2g | Cholesterol: 5mg | Sodium: 2mg | Potassium: 268mg | Sugar: 1g | Calcium: 10mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

7 மணி நேரங்கள் ago

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

11 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

11 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

11 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

21 மணி நேரங்கள் ago