இன்று நாம் ஒரு அட்டகாசமான மற்றும் அற்புதமான சுவையில் இருக்கும் ஒரு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் வீட்டில் தோசை சுடும் பொழுது அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய முட்டை மசால் தோசை ரெசிப்பி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில்
இதையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான கருவேப்பிலை இட்லி பொடி செய்வது எப்படி ?
இது போன்று ஒரு முட்டை மசால் தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு வாய்க்கு ருசியாக இருக்கும் குறிப்பாக குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த சுவையான முட்டை மசால் தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
முட்டை மசால் தோசை | Egg Masal Dosai Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1 பெரிய பவள் தோசை மாவு
- 2 tbsp எண்ணெய்
- ½ tbsp கடுகு
- 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
- 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
- 2 கொத்து கருவேப்பிலை பொடியாக நறுக்கியது
- 1 தக்காளி நறுக்கியது
- ¼ tbsp மஞ்சள் தூள்
- ½ tbsp மல்லி தூள்
- ½ tbsp மிளகாய் தூள்
- ½ tbsp கரம் மசாலா
- 4 முட்டை
- உப்பு தேவையான அளவு
- ½ tbsp மிளகு தூள்
- கொத்த மல்லி சிறிது
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் நன்கு காய்ந்து வந்தவுடன் அதில் கடுகு சேர்க்கவும் பின் கடுகு நன்றாக புரிந்து வந்தவுடன்.
- பின் இதனுடன் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கி விடுங்கள்.
- அதன் பின் இதனுடன் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை இலைகள், பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
- பின் நாம் சேர்த்த மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் இதனுடன் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுப் பொடி சேர்த்து முட்டை உதிரி உதிரியாக வரும் வரை கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
- அதன் பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடாகியதும் இரண்டு கரண்டி மாவை எடுத்து ஊற்றி தோசையை அதிகம் விரித்து விடாமல். பின் அதன் மேல் நாம் தயார் செய்து வைத்து இருக்கும் முட்டை மசாலாவை சேர்த்து.
- பின் அதற்கு மேல் பொடியாக நறுக்கி வெங்காயம் சிறிது மற்றும் சிறிது கொத்தமல்லி தூவி தோசை கரண்டியால் மெதுவாக அமிக்கி விட்டு. பின் இருபுறமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான முட்டை மசால் தோசை தயாராகி விட்டது.