Advertisement
சைவம்

ருசியான முட்டை சேமியா இப்படி செஞ்சி பாருங்க! வெறும் 10 நிமிஷத்துல இரவு டிபன் ரெடி!

Advertisement

உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது முட்டை சேமியா உப்புமா. இதை பெரும்பாலும் காலை நேர டிஃபனாகவோ அல்லது மாலை நேர டிஃபனாகவோ தான் பலரும் சுவைக்கிறார்கள். இவை பெரும்பாலும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் தான் உண்ணப்படுகிறது.

இதில் நாம் கேரட், பீன்ஸ், மற்றும் பச்சைப் பட்டாணி போன்ற பல விதமான காய்கறிகளையும் சேர்ப்பதனால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது. நம்மில் பெரும்பாலோனருக்கு உப்புமா என்றாலே முகம் சுளித்து தான் சாப்பிடுவார்கள். ஆனால் உப்புமாவானது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மற்றும் ஆரோக்கியமான வகை ஆகும். உணவு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை செய்து சாப்பிட விரும்புவோம். இப்போது, குளிர்காலம் என்பதால் சூடாக ஏதாவது சாப்பிட விரும்புவோம்.

Advertisement

குழந்தைகளும் பள்ளி முடிந்து வந்து சூடாக ஏதாவது செய்து தர கேட்பார்கள். சேமியாவில் முட்டை சேர்த்து உப்புமா செய்யுங்கள். பலருக்கும் உப்புமா பிடிக்காததற்கு முக்கிய காரணம் அதன் சுவையே. எனவே அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் உப்புமாவை கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சமைக்கலாம். உப்புமாவை பிடிக்காது என்று கூறியவர்கள் கூட நிச்சயமாக அடிக்கடி செய்து தருமாறு விரும்பி சாப்பிடுவார்கள். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் முட்டை மற்றும் மசாலா சேர்த்து அட்டகாசமான சுவையில் சேமியா உப்புமாவை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

முட்டை சேமியா | Egg Semiya Recipe in Tamil

Print Recipe
உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது முட்டை சேமியா உப்புமா.
Advertisement
இதை பெரும்பாலும் காலை நேர டிஃபனாகவோ அல்லது மாலை நேர டிஃபனாகவோ தான் பலரும் சுவைக்கிறார்கள். இவை பெரும்பாலும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் தான் உண்ணப்படுகிறது. பலருக்கும் உப்புமா பிடிக்காததற்கு முக்கிய காரணம் அதன் சுவையே. எனவே அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் உப்புமாவை கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சமைக்கலாம். உப்புமாவை பிடிக்காது என்று கூறியவர்கள் கூட நிச்சயமாக அடிக்கடி செய்து தருமாறு விரும்பி சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian
Keyword egg semiya
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 70

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Ingredients

  • 1 சேமியா
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்  
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 முட்டை
  • 1 தக்காளி                      
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 கப் கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிதளவு எண்ணெய் விட்டு சேமியாவை பொன்னிறத்தில் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து முட்டையை நன்றாக அடித்து ஊற்றி தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து கலந்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • மசாலா வாசனை போனவுடன் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் வறுத்து வைத்துள்ள சேமியாவை அதில் சேர்த்து வேக விடவும்.
  • சேமியா வெந்ததும், வறுத்து வைத்திருக்கும் முட்டையை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி மல்லித்தழை நறுக்கியது தூவி அடுப்பில் இருந்து இறக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான முட்டை சேமியா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 70kcal | Carbohydrates: 0.2g | Protein: 6g | Fat: 2g | Saturated Fat: 0.1g | Sodium: 70mg | Potassium: 69mg | Calcium: 28mg | Iron: 4mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

2 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

12 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

13 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

14 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

15 மணி நேரங்கள் ago