- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது முட்டை சேமியா உப்புமா. இதை பெரும்பாலும் காலை நேர டிஃபனாகவோ அல்லது மாலை நேர டிஃபனாகவோ தான் பலரும் சுவைக்கிறார்கள். இவை பெரும்பாலும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் தான் உண்ணப்படுகிறது.
இதில் நாம் கேரட், பீன்ஸ், மற்றும் பச்சைப் பட்டாணி போன்ற பல விதமான காய்கறிகளையும் சேர்ப்பதனால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது. நம்மில் பெரும்பாலோனருக்கு உப்புமா என்றாலே முகம் சுளித்து தான் சாப்பிடுவார்கள். ஆனால் உப்புமாவானது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மற்றும் ஆரோக்கியமான வகை ஆகும். உணவு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை செய்து சாப்பிட விரும்புவோம். இப்போது, குளிர்காலம் என்பதால் சூடாக ஏதாவது சாப்பிட விரும்புவோம்.
குழந்தைகளும் பள்ளி முடிந்து வந்து சூடாக ஏதாவது செய்து தர கேட்பார்கள். சேமியாவில் முட்டை சேர்த்து உப்புமா செய்யுங்கள். பலருக்கும் உப்புமா பிடிக்காததற்கு முக்கிய காரணம் அதன் சுவையே. எனவே அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் உப்புமாவை கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சமைக்கலாம். உப்புமாவை பிடிக்காது என்று கூறியவர்கள் கூட நிச்சயமாக அடிக்கடி செய்து தருமாறு விரும்பி சாப்பிடுவார்கள். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் முட்டை மற்றும் மசாலா சேர்த்து அட்டகாசமான சுவையில் சேமியா உப்புமாவை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிதளவு எண்ணெய் விட்டு சேமியாவை பொன்னிறத்தில் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து முட்டையை நன்றாக அடித்து ஊற்றி தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து கலந்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
மசாலா வாசனை போனவுடன் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் வறுத்து வைத்துள்ள சேமியாவை அதில் சேர்த்து வேக விடவும்.
சேமியா வெந்ததும், வறுத்து வைத்திருக்கும் முட்டையை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி மல்லித்தழை நறுக்கியது தூவி அடுப்பில் இருந்து இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான முட்டை சேமியா தயார்.






