Advertisement
அசைவம்

காரசாரமான மசாலா முட்டை வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக இன்றைய நாட்களில் நாம் முட்டைகள் இல்லாமல் எந்த ஒரு உணவையும் எடுத்துக் கொள்வதில்லை. நாம் ஹோட்டல் சென்றால் கூட முட்டை இல்லாமல் நாம் எந்தவித உணவு பொருட்களையும் ஆர்டர் செய்வது கிடையாது. அப்படி இன்றைய மக்களின் வாழ்வியல் முறையுடன் முட்டை ஒன்றினைந்து போனது. முட்டை சாப்பிடுவதில் பெரும்பாலும் அவித்த முட்டையை யாரும் விரும்ப மாட்டார்கள்.

இதையும் படியுங்கள் : செட்டிநாடு ஆம்லெட் பிரியாணி செய்வது எப்படி ?

Advertisement

அதற்கு மாறாக ஆம்லெட், ஆப்ஆயில், கலக்கி என்று முட்டையை பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவுகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இன்று முட்டையை வைத்து நாம் இன்று ஒரு உணவு தயார் செய்ய போகிறோம். இன்று மசாலா முட்டை வறுவல் பற்றிதான் பார்க்க போகிறோம் இந்த முறையில் மசாலா முட்டை வறுவல் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். அதனால் மசாலா முட்டை வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

மசாலா முட்டை வறுவல் | Masala Egg Varuval Recipe in Tamil

Print Recipe
இன்றைய மக்களின் வாழ்வியல் முறையுடன் முட்டை ஒன்றினைந்து போனது. முட்டை சாப்பிடுவதில் பெரும்பாலும் அவித்த முட்டையை யாரும் விரும்ப மாட்டார்கள். அதற்கு மாறாக ஆம்லெட், ஆப்ஆயில், கலக்கி என்று முட்டையை பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவுகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இன்று முட்டையை வைத்து நாம் இன்று ஒரு உணவு தயார் செய்ய போகிறோம். இன்று மசாலா முட்டை வறுவல் பற்றிதான் பார்க்க போகிறோம் இந்த முறையில் மசாலா முட்டை வறுவல் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். அதனால் மசாலா முட்டை வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Fry
Cuisine Indian, TAMIL
Keyword Egg Varuval, முட்டை வறுவல்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 2 Person
Calories 155

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • 1  tbsp எண்ணெய்
  • 4 முட்டை
  • 2 பெரிய வெங்காயம் நீள்வாக்கில் நறுக்கியது
  • 1 தக்காளி நறுக்கியது
  • 1 tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் துள்
  • 1 tbsp மல்லித் தூள்
  • 1 tbsp மிளகுத்தூள்
  • 1 சிட்டிகை கரம் மசாலா
  • உப்பு                              தேவையான அளவு
  • கொத்த மல்லி சிறிதாக நறுக்கியது

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நாம் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
    Advertisement
  • வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி அதன்பின் இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி எடுங்கள். அதன்பின் இதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து கிளறி விடவும்.
  • அதன் பின் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும் பின்பு அரை கப் தண்ணீர் சேர்த்து வதக்கவும். தக்காளி மென்மையாக வதங்கி மசாலா கொதித்து வரும் பொழுது இதனுடன் சிறிது நறுக்கிய கொத்தமல்லியும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்..
  • பின் தண்ணீர் வற்றிய பிறகு நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள் பின் முட்டைக்கு தேவையான அளவு சிறிதளவு உப்பு மிளகு தூள் மற்றும் ஒரு சிட்டிகை கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்.
  • பின் ஒரு ஒரு நிமிடம் முட்டையை கிளறாமல் அப்படியே வேகவிடுங்கள் அதன் பின்பு முட்டையை கிளறிவிட்டு வதக்கினால் பெரிய பெரிய முட்டையை துண்டுகளாக வரும் அவ்வளவுதான் மசாலா முட்டை வறுவல் இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Serving: 2people | Calories: 155kcal | Carbohydrates: 1.1g | Protein: 13g | Fat: 11g | Saturated Fat: 3.3g | Cholesterol: 373mg | Sodium: 124mg | Potassium: 126mg | Sugar: 1.1g

English Overview: egg varuval is one of the most important dishes in india. egg varuval recipe or egg varuval seivathu eppadi or egg varuval recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

17 நிமிடங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

21 நிமிடங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

26 நிமிடங்கள் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

1 மணி நேரம் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

3 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

4 மணி நேரங்கள் ago