- Prep
- 20 min
- Cook
- 30 min
- Total
- 50 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Main Course
பொதுவாக யாரிடம் சென்று உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டால் நாம் கேட்கும் பாதி நபர்கள் அவர்களுக்கு பிடித்த உணவு பிரியாணி என்று தான் கூறுவார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு பிரியாணி மிகவும் பிரபலமான ஒரு உணவாக இன்று காலகட்டங்களில் வலம் வருகிறது. இந்த பிரியாணியை பல வகையில் நாம் செய்து சாப்பிட்டு வருகிறோம். சிலர் பிரியாணிக்காக உயிரே விடும் அளவிற்கு அதை நேசிக்கவும் செய்கிறார்கள். அப்பட்ட பிரியாணியை இன்று நாம் ஒரு வித்தியாசமான முறையில் செய்ய இருக்கிறாம்.
இதையும் படியுங்கள் : தள்ளுவண்டி கடை காரசாரமான மூளை முட்டை பொரியல் செய்வது எப்படி ?
ஆம், இன்று ஆம்லெட் பிரியாணி செய்ய போகிறோம் இதை ஒரு முறை உங்க வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் சமைத்து கொடுங்கள் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த ஆம்லெட் பிரியாணிக்கு முற்றிலும் அடிமையாக இருப்பவர்கள். அந்த அளவிற்கு தாருமாரான சுவையும், ருசியும் கொண்டிருக்கும் இந்த இந்த ஆம்லெட் பிரியாணியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் பிரியாணிக்கு நாம் எடுத்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை இரண்டு முறை தண்ணீரில் அலசி கொண்டு 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். அதன்பின் பிரியாணிக்கு தேவையான ஆம்லெட் செய்ய வேண்டும்.
முட்டைகளை ஒரு பவுளில் உடைத்து ஊற்றி அதனுடன் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி வெங்காயம், கொத்தமல்லி, மற்றும் உப்பு சேர்த்து நான்கு அடித்துக் கொண்டு அடுப்பில் ஒரு பேனை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
பின் எண்ணெய் காய்ந்தவுடன், முட்டையை ஊற்றி இரு பக்கமும் திருப்பி போட்டு ஆம்லெட் செய்து கொள்ளவும். பின் ஆம்லேட்டை மீடியம் சைஸ் வெட்டிக் கொள்ளவும். பின்பு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி கொள்ளவும்.
அதன் பின் எண்ணெய் சூடறியவுடன் அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் அண்ணாச்சி பூ போன்ற பொருட்களை சேர்த்து விட்டு ஒரு 15 நொடி வதக்கி விட்டு இதனுடன் நீளவாக்கில் வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நான்கு வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் இதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும். அதன்பின் நீளவாக்கில் வெட்டி வைத்திருக்கும் தக்காளியும் இதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
தக்காளி மென்மையாக வெந்து மசிந்து வந்ததும் தயிர், புதினா இலை, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியவுடன் நாம் வெட்டி வைத்திருக்கும் ஆம்லெட்டை இதனுடன் சேர்த்து இரண்டு முறை கிளறி விடவும்.
அதன் பின் நம் ஊறவைத்த பாஸ்மதி அரிசியும் இதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் போற்றி அதன் பின் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை மிதமான தீயில் அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.
கடைசியாக ஒரு விசில் வந்ததும் குக்கரின் பிரெஷரை ரிலீஸ் செய்து மூடியை திறந்து கொண்டு பிரியாணியை மிக்ஸ் செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான ஆம்லெட் பிரியாணி இனிதே தயாராகிவிட்டது.






