ஆந்திரா ஸ்டைலில் முட்டை வேப்புடு இப்படி செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!

முட்டை வேப்புடு என்பது மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி. இதனை தமிழில் முட்டை ப்ரை என்று சொல்லலாம். ஆந்திராவில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய முட்டை வேப்புடு செய்முறை பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். முட்டையுடன் மசாலா சேர்த்து மிக எளிதாக 20 நிமிடங்களுக்குள் செய்யக்கூடிய

By Prem Kumar · 7/8/2024

முட்டை வேப்புடு என்பது மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி. இதனை தமிழில் முட்டை ப்ரை என்று சொல்லலாம். ஆந்திராவில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய முட்டை வேப்புடு செய்முறை பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். முட்டையுடன் மசாலா சேர்த்து மிக எளிதாக 20 நிமிடங்களுக்குள் செய்யக்கூடிய ஸைட் டிஷ் என முட்டை வேப்புடுவை குறிப்பிடலாம். இதனைத் தயிர் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு ருசியாக இருக்கும்.

பொதுவாக வீட்டில் முட்டை இருந்தால் அதை அவித்து, ஆம்லெட் போட்டு அல்லது குழம்புகளில் சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் எப்போதாவது முட்டை வேப்புடு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா.? இல்லையென்றால் வீட்டிலேயே முட்டை வைத்து ஒரு முறை இந்த முட்டை வேப்புடு செய்து பாருங்கள். இது வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். மீண்டும் இதனை அடிக்கடி சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் அளவிற்கு இந்த ரெசிபி இருக்கும். தட்டு நிறைய வைத்து கொடுத்தாலும் ஒன்று கூட மிச்சம் இல்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள். இதை நீங்கள் மாலை நேர ஸ்நாக்ஸாக சூடாக பரிமாறலாம்.

முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6, எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது மற்றும் எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது. பொதுவாக முட்டையை உண்ண அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு முட்டையை இவ்வாறு வேப்புடு செய்து கொடுத்தால் அதை அவர்கள் விரும்பி உண்பார்கள். அது மட்டுமின்றி இன்னும் வேண்டும் என்று தானாக கேட்டு உண்பார்கள்.

இதனையும் படியுங்கள் : எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Recipes AMP · Quick view
View full