சனி பெயர்ச்சியால் ஏற்படும் ஏழரை நாட்டு சனி பாதிப்பு விலக வன்னி மரச்செடி வழிபாடு!!

2025 சனிப்பெயர்ச்சி 2025-ல் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுவது சனிப்பெயர்ச்சி. கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு பலன்களை கொடுக்கக்கூடிய நீதிதேவன் என்று அழைக்கப்படுபவர் தான் சனிபகவான். மார்ச் 29ஆம் தேதி சனீஸ்வர பகவான் பெயர்ச்சியாக உள்ள நிலையில் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி தொட

By ·

2025 சனிப்பெயர்ச்சி

2025-ல் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுவது சனிப்பெயர்ச்சி. கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு பலன்களை கொடுக்கக்கூடிய நீதிதேவன் என்று அழைக்கப்படுபவர் தான் சனிபகவான். மார்ச் 29ஆம் தேதி சனீஸ்வர பகவான் பெயர்ச்சியாக உள்ள நிலையில் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கப் போகிறது. இந்த சனி பகவான் 2027 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வரை மீன ராசிகள் பயணம் செய்யப் போகிறார்.

ஏழரை நாட்டு சனி

இந்த சனிப்பெயர்ச்சியால் மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்கப் போகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஏழரை நாட்டு சனி இருக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு 2 1/2 ஆண்டுகளுக்கு ஏழரை சனி இருக்கும் மேஷ ராசியினருக்கு விரைய சனி இருக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை ஆண்டுகளுக்கு ஏழரை சனி இருக்கும் இதனால் மனக்கஷ்டம் பணக்கஷ்டம் என அனைத்துமே உருவாக வாய்ப்புள்ளது உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். சனிபகவான் அவரவர்களுக்கு உடைய கர்ம வினைகளை கொடுத்தே தீருவார் பிரச்சனைகளை தந்து சோதித்து விட்டு பிறகு வாழ்க்கையில் செல்வங்களையும் வளங்களையும் கூட அள்ளித் தருவார். இதிலிருந்து விடுபடுவதற்கு பல பரிகாரங்களை நாம் செய்ய வேண்டும்.

ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுபட பரிகாரங்கள்

எதிரி நாட்டில் அணியின் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் காகம் கருப்பு நிற நாய் கருப்பு நிற பசு எலும்புகள் போன்றவற்றிற்கு உணவளிக்க வேண்டும் மேலும் முக்கியமாக வன்னி மரச்செடி வழிபாடு ஏழரைச் சனியை நீக்கும்.

வன்னி மரச்செடி வழிபாடு

வன்னி மரச்செடிகை வழிபட்டால் சனிபகவானின் அருளை பரிபூரணமாக பெற முடியும். மேலும் ஏழை நாட்டு சனி ஆள் பாதிக்கப்பட்டவர்கள் வன்னி மரச்செடியை நட்டு வழிபடுவதால் மலைபோல் வந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கிவிடும். கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறுவதற்கு வன்னி மரச்செடியை வழிபடுவது மிகவும் நல்லது. வன்னி மரம் ஆன்மீக சக்தி கொண்டது எனவே இதனுடைய இலைகள் பூக்கள் என அனைத்து பாகங்களுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என கூறலாம். சிவன் கோவிலில் தல விருட்சமாக இருக்கக்கூடிய வன்னி மரத்தின் நிலைகள் தங்க நகைகளுக்கு நிகரானது. மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் அனைத்து சொத்துக்களையும் இழந்து அஞ்ஞானவாசம் மேற்கொள்வதற்கு முன்பாக ஆயுதங்கள் ஆடை அணிகலன்கள் அனைத்தையும் கழட்டி ஒரு துணியில் கட்டி வன்னி மரச்செடியில் வைத்து சென்றதாக கூறப்படுகிறது. சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம் வன்னி மரம் என்பதால் அவர்கள் வைத்து அணைத்து பொருட்களுமே பாதுகாப்பாகவும் இருந்ததாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையும் படியுங்கள் : கெட்ட சக்திகளை விரட்டியடிக்கும் வராகி அம்மன் வழிபாடு!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை