குடும்பத்தில் உள்ள அனைவருமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் தெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது. வீட்டில் உள்ள பெண்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என்று தான் விரதங்களை வழிபாடுகளையும் மேற்கொள்வார்கள். அந்த வகையில் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் அழிந்து நல்ல சக்திகள் குடியேறுவதற்கு வராகி அம்மனை வழிபாடு செய்யும் முறையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வராகி அம்மன்
இவைகளை ஓட ஓட விரட்டக்கூடிய தெய்வமாகத்தான் வராகி அம்மன் உள்ளார். வெற்றியை அள்ளிக் கொடுக்கக்கூடிய வாராகி அம்மனை முழு மனதோடு நாம் வழிபாடு செய்து வந்தால் நம் கண்களுக்கு தெரியாத எதிரிகளை கூட வராஹி அம்மன் அழித்து விடுவார். நமக்கு எதிரிகள் மூலமாக எந்த பிரச்சினைகளையும் தராமல் வராகி அம்மன் நமக்கு அருள் புரிவார். அப்படிப்பட்ட வராகி அம்மனை வழிபடக்கூடிய ஒரு தீப வழிபாட்டு முறையை பற்றி பார்க்கலாம்.
வழிபாடு செய்யும் முறை
இந்த வழிபாடு செய்வதற்கு நமக்கு கருநீல துணி ஒன்று தேவைப்படும் அதனை சதுர வடிவில் வெட்டி நடுவில் வெண்கடுகு ஒரு ஸ்பூன் அளவிற்கு வைத்து மூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். சனீஸ்வர பகவானுக்கு எழுதிபம் ஏற்றக்கூடிய அதே முறையில் தான் வராகி அம்மனுக்கு வெண்கடுகு தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் ஏற்ற வேண்டிய நேரம்
இந்த தீபத்தை சனிக்கிழமை அன்றுதான் ஏற்ற வேண்டும் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளும், இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளும் இந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம். இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யும்போது வராகி அம்மன் நமக்கு முழுவதுமாக ஆசி தருவார். வீட்டுக்கு அருகில் வராகி அம்மன் சன்னதி இருந்தால் அங்கு ஏற்றலாம் இல்லையென்றால் வீட்டிலேயே ஏற்றலாம். தொடர்ந்து எட்டு வாரங்கள் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். ஒவ்வொரு வாரமும் புது அகல்விளக்கில் ஏற்றினால் சிறப்பானது. வராகி அம்மனுடைய அருளால் நம்முடைய அனைத்து தீய சக்திகளும் விலகும். முழு மனதோடு நம்பிக்கையோடு இந்த தீப வழிபாட்டை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் வீண் செலவாகமல் இருக்க! இந்த ஒரு விளக்கு மட்டும் ஏற்றுங்கள் போதும்!



