ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் இந்த மாதிரி செஞ்சு பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது!!

ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கொங்கு நாட்டு ஸ்டைலில் இந்த மாதிரி ஒரு சிக்கன் ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. தயிர் சாதம், பருப்பு சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான சைட

By Prem Kumar · 12/5/2025

ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கொங்கு நாட்டு ஸ்டைலில் இந்த மாதிரி ஒரு சிக்கன் ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. தயிர் சாதம், பருப்பு சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான சைடு டிஷ்ஷா இருக்கும். கொங்கு நாடுகளான ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் இந்த பக்கங்களில் அடிக்கடி அரிசியும் பருப்பும் சாதம் செய்வாங்க. அந்த மாதிரி அரிசியும் பருப்பும் செய்யும் போது சைடு டிஷ்ஷா இந்த மாதிரி ஒரு சூப்பரான அந்த ஊர் ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் செஞ்சு சாப்பிடும் போது சுவை ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும்.

சுட சுட சாதத்திலும் போட்டு பிசைந்து சாப்பிடலாம் பழைய சாதத்துக்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடவும் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டும் தான் தேவைப்படும் காய்ந்த மிளகாய் மட்டுமே காரத்துக்கு போதுமானது தேவைப்பட்டால் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளலாம். இதுக்கு சின்ன வெங்காயம் மட்டும் தான் சேர்க்க வேண்டும். பெரிய வெங்காயம் நல்லா இருக்காது.

டேஸ்டான இந்த ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் கண்டிப்பா ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க. சிக்கன் வச்சு நிறைய பொருட்கள் சேர்த்து ரெசிபி செஞ்சு சாப்பிட பிடிக்கலைன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செய்து சாப்பிட்டு பாருங்க. அவ்ளோ அருமையாக இருக்கும். சமைக்கிறதுக்கு போரடிக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் எல்லாருக்கும் புடிச்ச மாதிரி சிம்பிளா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : அடுத்த முறை சிக்கன் எடுத்தா ஒரு தடவை பாட்டி கோழிக்கறி செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full