Home அசைவம் ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் இந்த மாதிரி செஞ்சு பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது!!

ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் இந்த மாதிரி செஞ்சு பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது!!

ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கொங்கு நாட்டு ஸ்டைலில் இந்த மாதிரி ஒரு சிக்கன் ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. தயிர் சாதம், பருப்பு சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான சைடு டிஷ்ஷா இருக்கும். கொங்கு நாடுகளான ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் இந்த பக்கங்களில் அடிக்கடி அரிசியும் பருப்பும் சாதம் செய்வாங்க. அந்த மாதிரி அரிசியும் பருப்பும் செய்யும் போது சைடு டிஷ்ஷா இந்த மாதிரி ஒரு சூப்பரான அந்த ஊர் ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் செஞ்சு சாப்பிடும் போது சுவை ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும்.

-விளம்பரம்-

சுட சுட சாதத்திலும் போட்டு பிசைந்து சாப்பிடலாம் பழைய சாதத்துக்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடவும் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டும் தான் தேவைப்படும் காய்ந்த மிளகாய் மட்டுமே காரத்துக்கு போதுமானது தேவைப்பட்டால் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளலாம். இதுக்கு சின்ன வெங்காயம் மட்டும் தான் சேர்க்க வேண்டும். பெரிய வெங்காயம் நல்லா இருக்காது.

டேஸ்டான இந்த ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் கண்டிப்பா ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க. சிக்கன் வச்சு நிறைய பொருட்கள் சேர்த்து ரெசிபி செஞ்சு சாப்பிட பிடிக்கலைன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செய்து சாப்பிட்டு பாருங்க. அவ்ளோ அருமையாக இருக்கும். சமைக்கிறதுக்கு போரடிக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் எல்லாருக்கும் புடிச்ச மாதிரி சிம்பிளா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் | Erode Pallipalayam Chicken Recipe In Tamil

ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கொங்கு நாட்டு ஸ்டைலில் இந்த மாதிரி ஒரு சிக்கன் ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. தயிர் சாதம், பருப்பு சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான சைடு டிஷ்ஷா இருக்கும். கொங்கு நாடுகளான ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் இந்த பக்கங்களில் அடிக்கடி அரிசியும் பருப்பும் சாதம் செய்வாங்க அந்த மாதிரி அரிசியும் பருப்பும் செய்யும் போது சைடு டிஷ்ஷா இந்த மாதிரி ஒரு சூப்பரான அந்த ஊர் ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் செஞ்சு சாப்பிடும் போது சுவை ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும். சுட சுட சாதத்திலும் போட்டு பிசைந்து சாப்பிடலாம் பழைய சாதத்துக்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடவும் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Erode Pallipalayam Chicken
Yield: 4 People
Calories: 128kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சிக்கன்
  • 1/4 கப் தேங்காய் துண்டுகள்
  • 20 சின்ன வெங்காயம்
  • 10 வர மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் விதை நீக்கிய காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக பத்து நிமிடம் கிளறவும்.
  • பிறகு தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக வேகவைத்த சிக்கனை இறக்கினால் சுவையான ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் தயார்.

Nutrition

Serving: 550g | Calories: 128kcal | Carbohydrates: 2.7g | Protein: 16g | Fat: 4.4g | Sodium: 160mg | Potassium: 206mg | Fiber: 22g | Vitamin A: 57IU | Vitamin C: 122mg | Calcium: 21mg | Iron: 17mg

இதனையும் படியுங்கள் : அடுத்த முறை சிக்கன் எடுத்தா ஒரு தடவை பாட்டி கோழிக்கறி செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும்!!