வாராந்திர ராசிபலன் 02 பிப்ரவரி 2025 முதல் 08 பிப்ரவரி 2025 வரை!!
மேஷம் துணிச்சலுடன் வியாபாரத்திற்குத் தேவையான முதலீடுகளை செய்வீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் வீடு தேடி வரும். தெளிவான சிந்தனையுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைத்து தேவையைப் பூர்த்தி செய்யும். வியாபாரம் காரணமாக குடும்பத்தை சில காலம் பிரிந்து
மேஷம்
துணிச்சலுடன் வியாபாரத்திற்குத் தேவையான முதலீடுகளை செய்வீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் வீடு தேடி வரும். தெளிவான சிந்தனையுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைத்து தேவையைப் பூர்த்தி செய்யும். வியாபாரம் காரணமாக குடும்பத்தை சில காலம் பிரிந்து இருப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி கிடைத்து சந்தோஷப்படுவீர்கள். உறவுகளில் பிணக்கு நீங்கி அனைவரையும் ஒன்று சேர்ப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகம் ஏற்பட்டு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
ரிஷபம்
எந்தச் செயலையும் ஒரு தடவைக்கு இரு தடவை யோசித்துச் செய்யுங்கள். தொழில் தொடர்பான வியாபாரத்திலிருந்த தடைகள் விலகி ஓடும். பிரச்சனைகளைப் பெரிதாக எண்ணாமல் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய தொழில்களில் முதலீடு செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்கள் சாதகமாக அமையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நிலையான வருமானத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
வெறுப்புகளை விலக்கி விட்டு பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் நீண்ட நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அரசு வேலை வாய்ப்பு சாதகமாக இருக்கும். உத்தியோக உயர்வு உண்டாகலாம். தனியார் துறையிலும் ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் நீங்கி மனநிம்மதி உண்டாகும். தாய் மாமனுக்கு உதவி செய்வீர்கள். உறவினர்களை ஒன்று சேர்ப்பீர்கள். தந்தையார் உடல்நிலையில் சற்று அக்கறை காட்டுங்கள். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருங்கள்.
கடகம்
திட்டம் போட்டு செலவு செய்யுங்கள். வெளியூர்ப் பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் களவு போவதற்கான வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டிலிருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் தடையில்லாமல் வந்து சேரும். பங்குச்சந்தை வியாபாரத்தில் நம்பி முதலீடு செய்யலாம். இந்த வாரம் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீண்டதூரப் பயணங்களால் செலவு அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.
சிம்மம்
இந்த வாரம் அவசரப்பட்டு காரியத்தில் இறங்காமல் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்கள். மற்றவர்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். தொழிலுக்குப் போட்டிகள் அதிகரிக்கும். புதிய தொழில்களில் முதலீடு செய்யலாம். வியாபாரம் முன்னேற்றகரமாக இருக்கும். கணவன் மனைவியிடவே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். இந்த வாரத்தின் நடுப்பகுதியில் மனக்கவலை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்த ஒரு சிக்கல் விலகும். தான தர்மங்களை செய்வீர்கள்.
கன்னி
இந்த வாரம் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து விடுவீர்கள். தடைபட்ட திருமணம் நடக்கும். குழந்தை இல்லாத வீட்டில் மழலைப் பாக்கியம் உண்டாகும். புதிய பதவிகள் கிடைக்கலாம். அதிகாரிகள் கொடுத்த வேலையை முடித்து நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். புதிய நண்பர்கள் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்வீர்கள். யாருக்கும் எந்த வாக்கும் கொடுக்காதீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவமானம் வந்து சேரும்.
துலாம்
கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசித்து முடிவு எடுங்கள். இந்த வாரம் நீண்ட நாள் கனவு பலிக்கும். மனதில் நிம்மதி ஏற்படும் வாரம் இது. குடும்பத்தில் சுபகாரிய செலவு ஏற்படும். புதிய முதலீடுகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வீர்கள். நீண்ட காலமாக பாதிப்பைத் தந்த நோய் அகலும். உறவுகள் நட்புகள் மேம்படும். எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில் எதை செய்தாலும் யோசித்து செய்யுங்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வார்கள்.
விருச்சிகம்
பணிவாக நடந்து கொண்டால் பொது இடங்களில் உங்கள் செல்வாக்கு உயரும். திருமண முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். இந்த வாரம் யாருக்கும் வாக்குக் கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த வாரம் சமூக அந்தஸ்தும், மதிப்பும் அதிகரிக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். வியாபாரிகள் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்வர்.
தனுசு
இந்த வாரம் நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பழைய பாக்கிகளை அதிரடியாக வசூல் செய்வீர்கள். மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். வங்கி சேமிப்பு உயரும். பணவரவு தாராளமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே மனம் வருந்தும்படியான வாக்குவாதங்கள் ஏற்படலாம். பழைய கடன்களை அடைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவை பெற்று செயல்படுவார்கள். இந்த வாரம் உடல் அசதி ஏற்பட்டு சரியாகும்.
மகரம்
இந்த வாரம் புதுப்புது சிந்தனைகளால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். துரோகிகளை நண்பர்களாக மாற்றுவீர்கள். சகோதரிகளுக்குத் தேவையான உதவிகளை செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை செய்வீர்கள். தொலைதூரப் பயணங்களில் பணம் விரையம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கத் தாமதமாகும். உறவுகளை ஒன்று சேர்ப்பதில் முனைப்புக் காட்டுவீர்கள். பெரிய மனிதர்கள் ஆசியால் வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று சுறுசுறுப்பாக செயல்படுவர்.
கும்பம்
இந்த வாரம் வேலை இடத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் வீண் பழியைச் சுமக்க நேரிடும். ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தைத் தொலைத்து விடாதீர்கள். எந்தக் காரியத்திலும் துணிச்சலாக இறங்குவீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள். தாய்மாமன் உறவில் விரிசல் ஏற்படலாம் அதனால் கவனமாக இருங்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சுப நிகழ்ச்சிகளில் செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வர தாமதமாகும். மனைவி வழி உறவினர்கள் உதவி செய்வார்கள். பழைய கடன்கள் தீரும் வாரம்.
மீனம்
இந்த வாரம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். பழுதான வாகனங்களைச் சீர்படுத்துவீர்கள். இந்த வாரம் கண்ட இடங்களில் சாப்பிடாதீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்க வேண்டும். சின்னச்சின்ன சச்சரவுகள் குடும்பத்தில் தோன்றலாம். பழைய கடன்களை அடைந்து புதிய கடன் பெறும் சூழல் ஏற்படும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகளுக்கு லாபகரமான காலகட்டம். எதிர்பாராத இடத்திலிருந்து தேவையான உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மனதிற்கு இனிய பணிச்சூழலில் பணியாற்றுவர்.
இதனையும் படியுங்கள் : சனிப் பெயர்ச்சியால் 2025 முதல் 2034 வரை எழரை நாட்டு சனி பாதிப்பு இருக்கக்கூடிய சில ராசிகள்!!