சனிபகவான் எப்பொழுதுமே கர்மவினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பார். மற்ற கிரகங்களை விட இவர் மிகவும் மெதுவாக பயிற்சி அடையக்கூடிய கிரகம் எனவே இரண்டரை ஆண்டுகளுக்கு நிகழக்கூடிய இந்த சனிப்பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் ஏழரை நாட்டு சனிக்காலம் நிர்ணயிக்கவும் படுகிறது. சனிப்பெயர்ச்சி சமயத்தில் சனீஸ்வரன் சஞ்சரிக்க கூடிய ராசிக்கும் அதற்கு முன்னும் பின்னும் உள்ள ராசிகளுக்கும் ஏழரை சனி நடக்கும். அந்த வகையில் 2025 முதல் 2034 ஆம் ஆண்டு வரை எந்தெந்த ராசிகளுக்கு எல்லாம் ஏழரை நாட்டு சனிக்காலம் நடக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஏழரை நாட்டு சனி
தற்போது சனிபகவான் கும்ப ராசியில் உள்ளதன் காரணமாக கும்ப ராசிக்கு ஜென்ம சனியும் மகர ராசிக்கு பாத சனியும் மீன ராசிக்கு விரய சனியும் நடந்து கொண்டிருக்கிறது.
மேஷ ராசி

2027 ஜூன் மூன்றாம் தேதி மேஷ ராசியில் சனி பெயர்ச்சி நடக்க உள்ளதால் மேஷ ராசிக்கு ஜென்ம சனியும் மீன ராசிக்கு பாத சனியும் ரிஷப ராசிக்கு விரய சனிக்காலமும் நடக்க ஆரம்பிக்கும்.
ரிஷப ராசி

2029 ஆகஸ்ட் 8ஆம் தேதி சனிபகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக போவதால் ரிஷப ராசிக்கு ஜென்ம சனியும் மேஷ ராசிக்கு பாத சனியும் மிதுன ராசிக்கு விரய சனியும் நடக்கும்
மிதுன ராசி

2032 மே மாதம் 31ம் தேதி சனிபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் மிதுன ராசிக்கு ஜென்ம சனியும் ரிஷப ராசிக்கு விரைய சனியும் கடக ராசிக்கு பாத சனியும் ஆரம்பிக்கும்
கடக ராசி

2034 ஜூலை 13ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து சனிபகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாக போவதால் கடக ராசிக்கு ஜென்ம சனியும் மிதுன ராசிக்கு பாதக சனியும் சிம்ம ராசிக்கு விரய சனியும் தொடங்க ஆரம்பிக்கும்.
மீன ராசி

மார்ச் மாதம் 29ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆவதால் மீன ராசிக்கு ஜென்ம சனியும் மேஷ ராசிக்கு விரகை சனியும் கும்ப ராசிக்கு பாத சனியும் நடக்கும்.
இதனையும் படியுங்கள் : கஷ்டம் தீர சனி பகவானுக்கு செய்யும் பரிகாரம்


