மொறு மொறு வென ருசியான பிங்கர் பிஷ் ஒரு முறை இப்படி வீட்டிலே செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி!
மீன் பிரியர்களுக்கு இந்த டேஸ்டியான பிங்கர் பிஷ் கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக பத்து, பதினைந்து நிமிடத்தில் செய்து பொரித்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். குழந்தைகள் ஹோட்டல்களுக்கு சென்றால் கண்டிப்பாக மு
மீன் பிரியர்களுக்கு இந்த டேஸ்டியான பிங்கர் பிஷ் கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக பத்து, பதினைந்து நிமிடத்தில் செய்து பொரித்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். குழந்தைகள் ஹோட்டல்களுக்கு சென்றால் கண்டிப்பாக முதலில் இந்த பிங்கர் பிஷ் தான் ஆடர் செய்யும் உணவு.
பிங்கர் பிஷ் என்றாலே அனைவரும் விரும்பி எல்லோரும் சாப்பிடுவார்கள். அதிலும் ஹோட்டல் ஸ்டைலில் பிங்கர் பிஷ் செய்து கொடுத்தால் சொல்லவே வேண்டாம். மீன் முள் எதுவும் இல்லாததால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். புலாவ், ரசம், சாம்பார் சாதத்திற்கு இதை சொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும். தேவைப்பட்டால் சப்பாத்தி ரோல் ஆக பரிமாறலாம். எல்லா வெரைட்டி ரைஸ்க்கும் சைடிஷ் ஆக வைக்கலாம். ஒரு ஸ்பெஷல் பிங்கர் பிஷ் இன்னைக்கு நாம் தயார் செய்யப் போகின்றோம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமான பிங்கர் பிஷ் எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் இனி பார்க்க இருக்கிறோம்.