மீன் பிரியர்களுக்கு இந்த டேஸ்டியான பிங்கர் பிஷ் கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக பத்து, பதினைந்து நிமிடத்தில் செய்து பொரித்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். குழந்தைகள் ஹோட்டல்களுக்கு சென்றால் கண்டிப்பாக முதலில் இந்த பிங்கர் பிஷ் தான் ஆடர் செய்யும் உணவு.
பிங்கர் பிஷ் என்றாலே அனைவரும் விரும்பி எல்லோரும் சாப்பிடுவார்கள். அதிலும் ஹோட்டல் ஸ்டைலில் பிங்கர் பிஷ் செய்து கொடுத்தால் சொல்லவே வேண்டாம். மீன் முள் எதுவும் இல்லாததால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். புலாவ், ரசம், சாம்பார் சாதத்திற்கு இதை சொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும். தேவைப்பட்டால் சப்பாத்தி ரோல் ஆக பரிமாறலாம். எல்லா வெரைட்டி ரைஸ்க்கும் சைடிஷ் ஆக வைக்கலாம். ஒரு ஸ்பெஷல் பிங்கர் பிஷ் இன்னைக்கு நாம் தயார் செய்யப் போகின்றோம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமான பிங்கர் பிஷ் எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் இனி பார்க்க இருக்கிறோம்.
பிங்கர் பிஷ் | Finger Fish Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 5 துண்டு நெய் மீன்
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/4 தேக்கரண்டி கார்ன் ப்ளார்
- ப்ரெட் க்ரம்ப்ஸ் தேவையான அளவு
- எண்ணெய் பொரிப்பதற்குதேவையான அளவு
- 1 1/2 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய் தூள்
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 1 தேக்கரண்டி .மிளகு தூள்
- 1 தேக்கரண்டி சாட் மசாலா
- 1/4 சீரக தூள்
- 2 தேக்கரண்டி கார்ன் ப்ளார்
- 2 தேக்கரண்டி அரிசி மாவு
- 1/4 தேக்கரண்டி சோயா சாஸ்
- 1 முட்டை
- 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
- உப்பு தேவையானளவு
செய்முறை
- மீனை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும். மீன் ஆறிய பிறகு முள் எல்லாம் நீக்கி விட்டு நன்றாக உதிர்த்து விடவும்.
- உதிர்த்த மீனில் கார்ன் ப்ளார் சேர்த்து மெதுவாக பிசையவும். பின் விரல் நீளத்திற்கு சிறு சிறுத் துண்டுகளாக உருட்டி வைக்கவும்.
- மாவிற்கு கூறிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கடைசியாக முட்டை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
- மீனை மாவில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- சுவையான பிங்கர் பிஷ் ரெடி