சுக்கிரன் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்க போகும் ஐந்து ராசிகள்!!

டிசம்பர் 28ஆம் தேதி இரவு 11:28 மணிக்கு சுக்கிர பகவான் கும்ப ராசிக்கு மாறுகிறார் இதனால் ஐந்து ராசிகளுக்கு சுக்கிரன் நன்மை அளிக்கப் போகிறார். புத்தாண்டு இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் பொற்காலம் தொடங்கும் என்று சொல்லலாம் கும்ப ராசிக்கு மாறப் போகிற சுக்கிர பகவானால் அதிர்ஷ்டம் பெற போ

By ·

டிசம்பர் 28ஆம் தேதி இரவு 11:28 மணிக்கு சுக்கிர பகவான் கும்ப ராசிக்கு மாறுகிறார் இதனால் ஐந்து ராசிகளுக்கு சுக்கிரன் நன்மை அளிக்கப் போகிறார். புத்தாண்டு இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் பொற்காலம் தொடங்கும் என்று சொல்லலாம் கும்ப ராசிக்கு மாறப் போகிற சுக்கிர பகவானால் அதிர்ஷ்டம் பெற போகும் சில ராசிகள் பற்றி பார்க்கலாம்.

மேஷ ராசி

கும்ப ராசியில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்ய போவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மை உண்டாகும்.வருமானம் அதிகரிக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும் மக்கள் உங்களிடம் ஈர்க்கப்படுவார்கள் புதிய நண்பர்களும் கிடைப்பார்கள். உங்களுடைய வசீகரத்தால் புதிய உறவுகளும் உங்களுக்கு கிடைக்கும் காதல் உறவுகளும் வலுப்பெறும் மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் தாக்கத்தால் தந்தை குரு போன்றவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். மிதுன ராசிக்காரர்கள் புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரித்து சகோதரர்களின் ஆதரவையும் பெறுவீர்கள்.

சிம்ம ராசி

சுக்கிரன் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பமாகும் காதலிலும் திருமண வாழ்க்கையிலும் வெற்றி பெறுவீர்கள் புதிய தொழில் கிடைக்கும் புதிய முதலீடுகள் லாபத்தை அதிகரித்து கொடுக்கும். மனைவியுடன் நேரத்தை செலவிடுவதற்கு இது நல்ல நேரம் என்று சொல்லலாம். சுக்கிரனின் அம்சம் உங்கள் ஆளுமையை மேம்படுத்தும் தனிமையில் இருப்பவர்கள் வாழ்க்கை துணையை காண்பதற்கான நேரம் ஆகவும் அமையும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் சுக்கிரனின் சஞ்சாரத்தால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் உறவினர்களின் வருகையால் வீட்டில் பொலிவு ஏற்படும். புதிய வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டை புதுப்பிப்பது வெளிநாட்டில் குடியேறுவதற்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் பிரவேசம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும். சுக்கிரனின் தாக்கத்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆளுமையை மேம்படுத்துவீர்கள். பொருளாதார ரீதியாக நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் சில முக்கியமான அனுபவ பாடங்களையும் கற்றுக் கொள்வதற்கான காலமாக அமையும்.

இதனையும் படியுங்கள் : 2025ம் ஆண்டில் சனி புதன் இணைவால் இனி அமர்க்களமாக இருக்க போகும் ராசிகள் இவை தான்!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை