ஜோதிடத்தில் சனி பகவான் என்றாலே அனைவருக்கும் ஒரு விதமான பயம் ஏற்படும். அவர் கெடுதலை மட்டும் செய்யக்கூடியவர் அல்ல. அவரின் அமைப்பு அந்த பல்வேறு விஷயத்தை நன்மைகளும் தரக்கூடியவர். ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகின்றது. சனி மற்றும் புதன் நட்பு கிரகங்கள் ஆகும். ஜாதகத்தில் இந்த கிரகங்களின் சேர்க்கை இருப்பின் அந்த நபர் கல்வி, ஞானம், கலைத்திறனில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். இரண்டு சக்திவாய்ந்த கிரகங்கள் சனி பகவான் மற்றும் புதன், 30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையப் போகின்றன. 2025 சனி பெயர்ச்சிக்கு முன்னதாக, ஜனவரி 19, 2025 அன்று இரவு 9.58 மணி முதல் சனியும் புதனும் 60 கோணத்தில் சந்திக்க இருப்பதால் திரி ஏகாதச யோகம் உண்டாகும். சனி – புதன் சேர்க்கை காரணமாக 3 ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள் அது யார் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

சனி-புதன் இணைவதால் மேஷ ராசிக்காரர்கள் 2025ம் ஆண்டில் நினைத்தது அனைத்தையும் அடைவர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். திருமண ஆகாதவர்களுக்கு திருமணம் குறித்த திட்டங்கள் வரலாம். உங்கள் தொழிலில் மிகவும் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் பல சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சொத்து சுகங்கள் கிடைக்கும். புதிய நபர்களுடன் நல்ல தொடர்பு ஏற்படும். உங்கள் உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
மகரம்

சனி-புதன் இணைவதால் மகரம் ராசிக்காரர்கள் 2025ம் ஆண்டில் பல நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. தங்கள் வாழ்க்கையில் பல பெரிய வாய்ப்புகளைப் பெறலாம். திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் தொழில் சிறப்பாக இருக்கும். அயல்நாட்டு வர்த்தகத்தில் லாபம் பெறலாம். இது தவிர, நீங்கள் வேலை தொடர்பான காரணங்களுக்காகவும் பயணம் செய்யலாம், இது மங்களகரமானது. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் லாபம் அடைவார்கள்.
கும்பம்

சனி-புதன் இணைவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு பல நல்ல செய்திகளை கொண்டு வருகிறது. உங்கள் மேலதிகாரி உங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பார். படைப்புத் துறையிலும் நிறைய முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் ஆளுமை மேம்படும். அதே நேரத்தில், நிதி திட்டங்களை உருவாக்க இது மிகவும் நல்ல நேரம். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை இந்த நேரத்தில் அற்புதமாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தாயுடனான உறவு வலுப்படும்.
இதனையும் படியுங்கள் : செவ்வாய் வக்ர பெயர்ச்சியால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!



