Advertisement
உடல்நலம்

ஃபுட் பாய்சனை நீக்கும் எளிய வீட்டு மருந்து !

Advertisement

ஃபுட் பாய்சன் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது என்றால் உங்கள் உடலில் குடல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். குடல் காய்ச்சல் என்பது நீங்கள் அசுத்தமான உணவுகளையோ, சுகாதாரமற்ற முறையில் சமைத்த உணவுகள் சாப்பிட்டால், அசுத்தமான தண்ணீர், கெட்டு போன உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் பகுதி மற்றும் இரைப்பை பகுதிகளில் பாக்டீரியா, வைரஸ்கள் குடல் பகுதியில் பரவி தொற்று உண்டாகிறது. இந்த தொற்று குடற் காய்ச்சலாக பரவுவதன் மூலம் ஃபுட் பாய்சன் நம் உடலில் ஏற்படும்.

ஃபுட் பாய்சன் அறிகுறி

குடற் காய்ச்சலால் ஏற்படும் பிரச்சனைகள் ஒன்றிலிருந்து பத்து நாட்கள் வரை நம் உடம்பில் இருக்கும். மேலும் குடற் காய்ச்சலின் அறிகுறிகள் 6 மணி நேரங்களில் இருந்து 24 மணி நேரங்களில் தென்படும். குடற் காய்ச்சலின் அறிகுறிகளாக வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல், காய்ச்சல், சோர்வு, பசியின்மை, தசை வலி, தலைவலி போன்றவை குடற் காய்ச்சல் ஏற்படும் போது வரும் அறிகுறிகளாக கருதப்படுகின்றது.

Advertisement

ஃபுட் பாய்சனுக்கு மருந்து

துளசி

துளசியை ஒரு கைப்பிடி எடுத்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு நன்றாக மை போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு அரைத்த துளசியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மேலும் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு தேன் கலந்து குடித்தாலும் ஃபுட் பாய்சன் பிரச்சினைகள் தீரும் ஏனென்றால் துளசி செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகளை தரும்.

சீரகம்

சீரகமும் ஃபுட் பாய்சன் ஆகிவிட்டால் அதை போக்குவதற்கு சிறந்த மருந்தாக பயன்படும் ஆம், ஒரு பாத்திரத்தில் மூன்று டம்ளர்

Advertisement
தண்ணீர் ஊற்றி இரண்டு டீஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள் நன்றாக கொதித்து வந்ததும் வடிக்கட்டு சீரக நீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஃபுட் பாய்சன் பிரச்சினைகள் உடனடியாக காணாமல் போகும்.

தயிர், வெந்தயம்

மேலும் ஃபுட் பாய்சன் ஏற்படும்போது

Advertisement
ஒரு தேக்கரண்டி தயிர் ஒரு தேக்கரண்டி வெந்தய விதைகளை சேர்த்து சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் விரைவில் தீரும். ஏனென்றால் தயிரில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பொருள் ஃபுட் பாய்சனுக்கு எதிராக வேலை செய்யும், வெந்தயம் நார் சுத்து உள்ளதால் வயிற்றில் உள்ள தண்ணீரை உறிந்து ஃபுட் பாய்சன் ஆகா விடாமல் நச்சுப் பொருட்களை நம் உடம்பிலிருந்து வெளியேற்றி விடும். இதுவும் ஃபுட் பாய்சனுக்கு ஒரு சிறந்த மருந்தாகும்.

இஞ்சி

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பி வைத்து சூடாக்கி கொள்ளுங்கள். பின்பு ஒரு சிறிய துண்டு இஞ்சி எடுத்து நசுக்கி கொள்ளுங்கள் தண்ணீர் கொதிக்கும் பொழுது இஞ்சியை அதில் போட்டு கொதிக்க விட்டுக் கொள்ளுங்கள். பின்பு தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டிலிருந்து மூன்று வேளை குடித்து வந்தால் உடம்பில் ஏற்பட்ட ஃபுட் பாய்சனுக்கு தீர்வாக அமையும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

4 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

4 மணி நேரங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

4 மணி நேரங்கள் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

5 மணி நேரங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

7 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

8 மணி நேரங்கள் ago