Home உடல்நலம் ஃபுட் பாய்சனை நீக்கும் எளிய வீட்டு மருந்து !

ஃபுட் பாய்சனை நீக்கும் எளிய வீட்டு மருந்து !

ஃபுட் பாய்சன் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது என்றால் உங்கள் உடலில் குடல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். குடல் காய்ச்சல் என்பது நீங்கள் அசுத்தமான உணவுகளையோ, சுகாதாரமற்ற முறையில் சமைத்த உணவுகள் சாப்பிட்டால், அசுத்தமான தண்ணீர், கெட்டு போன உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் பகுதி மற்றும் இரைப்பை பகுதிகளில் பாக்டீரியா, வைரஸ்கள் குடல் பகுதியில் பரவி தொற்று உண்டாகிறது. இந்த தொற்று குடற் காய்ச்சலாக பரவுவதன் மூலம் ஃபுட் பாய்சன் நம் உடலில் ஏற்படும்.

-விளம்பரம்-

ஃபுட் பாய்சன் அறிகுறி

குடற் காய்ச்சலால் ஏற்படும் பிரச்சனைகள் ஒன்றிலிருந்து பத்து நாட்கள் வரை நம் உடம்பில் இருக்கும். மேலும் குடற் காய்ச்சலின் அறிகுறிகள் 6 மணி நேரங்களில் இருந்து 24 மணி நேரங்களில் தென்படும். குடற் காய்ச்சலின் அறிகுறிகளாக வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல், காய்ச்சல், சோர்வு, பசியின்மை, தசை வலி, தலைவலி போன்றவை குடற் காய்ச்சல் ஏற்படும் போது வரும் அறிகுறிகளாக கருதப்படுகின்றது.

ஃபுட் பாய்சனுக்கு மருந்து

துளசி

துளசியை ஒரு கைப்பிடி எடுத்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு நன்றாக மை போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு அரைத்த துளசியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மேலும் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு தேன் கலந்து குடித்தாலும் ஃபுட் பாய்சன் பிரச்சினைகள் தீரும் ஏனென்றால் துளசி செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகளை தரும்.

சீரகம்

சீரகமும் ஃபுட் பாய்சன் ஆகிவிட்டால் அதை போக்குவதற்கு சிறந்த மருந்தாக பயன்படும் ஆம், ஒரு பாத்திரத்தில் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு டீஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள் நன்றாக கொதித்து வந்ததும் வடிக்கட்டு சீரக நீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஃபுட் பாய்சன் பிரச்சினைகள் உடனடியாக காணாமல் போகும்.

-விளம்பரம்-

தயிர், வெந்தயம்

மேலும் ஃபுட் பாய்சன் ஏற்படும்போது ஒரு தேக்கரண்டி தயிர் ஒரு தேக்கரண்டி வெந்தய விதைகளை சேர்த்து சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் விரைவில் தீரும். ஏனென்றால் தயிரில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பொருள் ஃபுட் பாய்சனுக்கு எதிராக வேலை செய்யும், வெந்தயம் நார் சுத்து உள்ளதால் வயிற்றில் உள்ள தண்ணீரை உறிந்து ஃபுட் பாய்சன் ஆகா விடாமல் நச்சுப் பொருட்களை நம் உடம்பிலிருந்து வெளியேற்றி விடும். இதுவும் ஃபுட் பாய்சனுக்கு ஒரு சிறந்த மருந்தாகும்.

இஞ்சி

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பி வைத்து சூடாக்கி கொள்ளுங்கள். பின்பு ஒரு சிறிய துண்டு இஞ்சி எடுத்து நசுக்கி கொள்ளுங்கள் தண்ணீர் கொதிக்கும் பொழுது இஞ்சியை அதில் போட்டு கொதிக்க விட்டுக் கொள்ளுங்கள். பின்பு தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டிலிருந்து மூன்று வேளை குடித்து வந்தால் உடம்பில் ஏற்பட்ட ஃபுட் பாய்சனுக்கு தீர்வாக அமையும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here