செல்வத்தை பெருக்கக் கூடிய வெள்ளிக்கிழமை பரிகாரம்!!
ஆன்மீகத்திற்கும் நாணயத்திற்கும் நெடுந்தூர தொடர்பு உள்ளது. நாணயம் மகாலட்சுமி தேவியாரின் ஸ்ரூபமாக கருதப்படுகிறது. பழைய காலத்தில் இருந்து இப்பொழுது வரையில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது. அப்படி மகாலட்சுமி தேவியாருக்கு உகந்த நாணயத்தை கொண்டு மகாலட்சுமி தாயார் குபேரருக்கும்
ஆன்மீகத்திற்கும் நாணயத்திற்கும் நெடுந்தூர தொடர்பு உள்ளது. நாணயம் மகாலட்சுமி தேவியாரின் ஸ்ரூபமாக கருதப்படுகிறது. பழைய காலத்தில் இருந்து இப்பொழுது வரையில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது. அப்படி மகாலட்சுமி தேவியாருக்கு உகந்த நாணயத்தை கொண்டு மகாலட்சுமி தாயார் குபேரருக்கும் அர்ச்சனை செய்து வந்தால் குடும்பத்தில் உள்ள வறுமைகள் நீங்கும். வெள்ளிக்கிழமையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக வீட்டில் உள்ள வறுமை நீங்கி செல்வம் பெருகும் அதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
பரிகாரத்திற்கு தேவையான பொருள்
இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு தேவையான ஒன்று கல் உப்பு. கல்லுப்பு மகாலட்சுமி வாசம் செய்கிறார் மகாலட்சுமி தேவியார் பாற்கடலில் இருந்து பிறந்ததால் அவருடைய அம்சமாக கருதப்படுகிறது தூள் உப்பை விட கல் உப்புதான் மிகவும் சிறந்தது. வீட்டிலும் கல் பை பயன்படுத்தி வந்தால் ஒழுக்கம் சிந்தை செயல் அனைத்தும் மேம்பட்டு இருக்கும். இந்த கல்லுப்பை வைத்து நாம் பரிகாரம் செய்யும் போது தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்ய வேண்டும்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
சுத்தமான கல் உப்பை ஒரு கண்ணாடி பவுல் அல்லது புதிய மண்குவளையில் நிறைத்துக் கொள்ள வேண்டும். அதனை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரை அல்லது குளிகை நேரத்தில் பூஜை அறையில் வைக்க வேண்டும். பூஜை அறையை நன்றாக அலங்காரம் செய்து பூஜையை முடித்துவிட்டு ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து உப்பின் மீது வைக்க வேண்டும். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது இன்னொரு ஐந்து ரூபாய் நாணயத்தை உப்பில் சேர்க்க வேண்டும் இதே போல் 27 வெள்ளிக்கிழமை பூஜைகளை முடித்த பிறகு உப்பில் போட்ட நாணயங்களை ஒரு மஞ்சள் நிற துணியில் மூட்டையாக கட்டி அருகில் இருக்கக்கூடிய குலதெய்வ கோவிலுக்கு சென்று உண்டியலில் போட வேண்டும்.
பரிகாரத்தின் நன்மைகள்
பிறகு உப்பை ஓடும் தண்ணீரில் விட வேண்டும். அருகில் நீர்நிலைகள் இல்லை என்றால் வீட்டில் உள்ள சிங்கிள் போட்டு தண்ணீரை திறந்து விட வேண்டும். தொடர்ந்து 27 வாரங்கள் மகாலட்சுமி தேவியை வழிபட்டு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக பணம் அசையும் சொத்துக்கள் அசையா சொத்துக்கள், செல்வங்கள் என அனைத்தும் வீட்டிற்கு தேடி வரும். இவ்வளவு வறுமையில் இருந்தாலும் இந்த பரிகாரம் நிச்சயமாக கை கொடுக்கும். மனுதார இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இந்த பரிகாரத்தை செய்யும் போது இறைவனுடைய நாமங்களை உச்சரிக்க வேண்டும் எக்காரணத்திற்கு கொண்டும் அசுப வார்த்தைகளை பேசக்கூடாது. இந்த பரிகாரத்தை செய்து முடிக்கும் வரை முடிந்த வரையில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். முழு பக்தியோடு இதனை செய்து பாருங்கள் இதற்கான பலன்கள் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : கடன் சுமையை குறைக்கும் நவதானிய பரிகாரம்!