Advertisement
சைவம்

மணத்தக்காளி வற்றல் வைத்து அருமையான  ஒரு பூண்டு மணத்தக்காளி குழம்பு இப்படி ட்ரை பன்னி பாருங்க!

Advertisement

மணத்தக்காளி வற்றல். இது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. வாய்ப்புண், வயிற்று வலி, வயிறு புண் உள்ளவர்கள் இந்த மணத்தக்காளி வற்றல் சாப்பிட்டால் உடனே சரி ஆகும். மணத்தக்காளி கீரையை சில பேர் பொரியல் செய்து சாப்பிடுவார்கள். சில பேர் பருப்பு போட்டு கடைந்தும் சாப்பிடுவார்கள். ஆனால், மணத்தக்காளி வற்றல் சேர்த்து பூண்டு மணத்தக்காளி குழம்பு கூட மிக மிக சுவையாக மணக்க மணக்க செய்யலாம். அது எப்படி என்பதை பற்றிய ரெசிபி இதோ உங்களுக்காக.

உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க மணத்தக்காளி கீரையை,வற்றல் அடிக்கடி உணவில் சேர்த்து வருவது நன்மை தரும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் பூண்டு மணத்தக்காளி குழம்பு வைத்து சுவையான குழம்பு எப்படி தயாரிப்பது? ஆரோக்கியம் நிறைந்த இந்த பூண்டு மணத்தக்காளி குழம்பு வீட்டில் அரைப்பது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பகுதியின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

Advertisement

பூண்டு மணத்தக்காளி குழம்பு | Garlic Manathakkali Gravy Recipe In Tamil

Print Recipe
உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க மணத்தக்காளி
Advertisement
அடிக்கடி உணவில் சேர்த்து வருவது நன்மை தரும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் பூண்டு மணத்தக்காளி வைத்து சுவையான குழம்பு எப்படி தயாரிப்பது?ஆரோக்கியம் நிறைந்த இந்த பூண்டு மணத்தக்காளி குழம்பு வீட்டில் செய்வது எப்படி? என்பதைதான் இந்த சமையல் குறிப்பு பகுதியின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
Advertisement
Course Kulambu
Cuisine tamil nadu
Keyword Garlic Manathakkali Gravy
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 108

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கப் உரித்த பூண்டு
  • 3 டீஸ்பூன் மணத்தக்காளி வற்றல்
  • வெல்லம் சிறிதளவு
  • புளி சிறிதளவு
  • 1 டீஸ்பூன் உதிர்த்த வெங்காய வடகம்
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  • உப்பு தேவைக்கேற்ப

வறுத்துஅரைக்க:

  • 2 டீஸ்பூன் மிளகு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் தனியா
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்

Instructions

  • வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை, ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து, நீர் விட்டு நைஸாக அரைக்கவும்
  • புளியைக் கரைத்து.. உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், அரைத்த விழுதை சேர்த்து, கொஞ்சம் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  • எண்ணெயில் பூண்டை வதக்கி இதனுடன் சேர்க்கவும்.பூண்டுபாதி வெந்ததும் மணத்தக்காளி வற்றல் சேர்க்கவும்.
  • வெங்காய வடகம் ஆகியவற்றை வறுத்துப் போடவும். நன்றாக கொதித்து வரும்போது இறக்கினால் சுவையான பூண்டு மணத்தக்காளி குழம்பு தயார்!

Nutrition

Serving: 200g | Calories: 108kcal | Carbohydrates: 18.7g | Protein: 6.1g | Sodium: 4mg | Fiber: 6.4g | Iron: 0.93mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

34 நிமிடங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

2 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

4 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

5 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

6 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

8 மணி நேரங்கள் ago