மணத்தக்காளி வற்றல் வைத்து அருமையான  ஒரு பூண்டு மணத்தக்காளி குழம்பு இப்படி ட்ரை பன்னி பாருங்க!

- Advertisement -

மணத்தக்காளி வற்றல். இது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. வாய்ப்புண், வயிற்று வலி, வயிறு புண் உள்ளவர்கள் இந்த மணத்தக்காளி வற்றல் சாப்பிட்டால் உடனே சரி ஆகும். மணத்தக்காளி கீரையை சில பேர் பொரியல் செய்து சாப்பிடுவார்கள். சில பேர் பருப்பு போட்டு கடைந்தும் சாப்பிடுவார்கள். ஆனால், மணத்தக்காளி வற்றல் சேர்த்து பூண்டு மணத்தக்காளி குழம்பு கூட மிக மிக சுவையாக மணக்க மணக்க செய்யலாம். அது எப்படி என்பதை பற்றிய ரெசிபி இதோ உங்களுக்காக.

-விளம்பரம்-

உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க மணத்தக்காளி கீரையை,வற்றல் அடிக்கடி உணவில் சேர்த்து வருவது நன்மை தரும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் பூண்டு மணத்தக்காளி குழம்பு வைத்து சுவையான குழம்பு எப்படி தயாரிப்பது? ஆரோக்கியம் நிறைந்த இந்த பூண்டு மணத்தக்காளி குழம்பு வீட்டில் அரைப்பது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பகுதியின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

Print
5 from 1 vote

பூண்டு மணத்தக்காளி குழம்பு | Garlic Manathakkali Gravy Recipe In Tamil

உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க மணத்தக்காளி அடிக்கடி உணவில் சேர்த்து வருவது நன்மை தரும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் பூண்டு மணத்தக்காளி வைத்து சுவையான குழம்பு எப்படி தயாரிப்பது?ஆரோக்கியம் நிறைந்த இந்த பூண்டு மணத்தக்காளி குழம்பு வீட்டில் செய்வது எப்படி? என்பதைதான் இந்த சமையல் குறிப்பு பகுதியின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Kulambu
Cuisine: tamil nadu
Keyword: Garlic Manathakkali Gravy
Yield: 4
Calories: 108kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் உரித்த பூண்டு
  • 3 டீஸ்பூன் மணத்தக்காளி வற்றல்
  • வெல்லம் சிறிதளவு
  • புளி சிறிதளவு
  • 1 டீஸ்பூன் உதிர்த்த வெங்காய வடகம்
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  • உப்பு தேவைக்கேற்ப

வறுத்துஅரைக்க:

  • 2 டீஸ்பூன் மிளகு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் தனியா
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்

செய்முறை

  • வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை, ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து, நீர் விட்டு நைஸாக அரைக்கவும்
  • புளியைக் கரைத்து.. உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், அரைத்த விழுதை சேர்த்து, கொஞ்சம் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  • எண்ணெயில் பூண்டை வதக்கி இதனுடன் சேர்க்கவும்.பூண்டுபாதி வெந்ததும் மணத்தக்காளி வற்றல் சேர்க்கவும்.
  • வெங்காய வடகம் ஆகியவற்றை வறுத்துப் போடவும். நன்றாக கொதித்து வரும்போது இறக்கினால் சுவையான பூண்டு மணத்தக்காளி குழம்பு தயார்!

Nutrition

Serving: 200g | Calories: 108kcal | Carbohydrates: 18.7g | Protein: 6.1g | Sodium: 4mg | Fiber: 6.4g | Iron: 0.93mg