காரசாரமான பூண்டு மசாலா தோசை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இரண்டு தோசைகள் அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!
தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை
தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை உணவு. இதை வெகு எளிதாக செய்துவிடலாம். அதுமட்டுமின்றி தோசை உடல் பருமனை அதிகரிக்கும் பொருட்களையோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருட்களையோ கொண்டவை அல்ல. மேலும் இவை எளிமையான மற்றும் எளிதாக செய்து முடிக்க கூடிய ஒரு உணவு வகை.
தோசையில் பல வகை உண்டு அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகுந்த சுவையான மற்றும் வித்தியாசமான பூண்டு மசாலா தோசை. என்ன பூண்டு தோசையா என்று நினைக்கிறீர்களா? ஆமாங்க. பூண்டு வைத்து சுவையான தோசையை செய்து உங்கள் வீட்டு குட்டிஸ்களுக்கு சாப்பிட கொடுங்கள். பொதுவாக நம் காலை உணவாக சாதா தோசை அல்லது ரவை தோசையை தான் நம்மில் பல பேர் வழக்கமாக நம் குடும்பத்தினருக்கு செய்து கொடுத்து இருப்போம்.
நீங்கள் வழக்கமாக செய்யும் தோசைக்கு ஒரு நாள் விடுப்பு கொடுத்துவிட்டு, ஒரு மாறுதலுக்காக இந்த மிகுந்த சுவையான பூண்டு மசாலா தோசையை செய்து உங்கள் குடும்பத்தினரை மகிழ வையுங்கள். அவர்கள் நிச்சயமாக அசந்து போவார்கள். வழக்கமாக பூண்டு வைத்து குழம்பு, குருமா, பூண்டு சாதம் போன்றவையே அதிகமாக செய்து இருப்போம். ஆனால் இன்று பூண்டு வைத்து மொறுமொறு தோசை செய்யலாமா!
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியமான சிறுதானிய தோசை மொறு மொறுவென்று இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை கூடுதலாகவே வாங்கி சாப்பிடுவார்கள்!!!