- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
ராகி, தினை, வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற பல சிறுதானியங்கள் உள்ளன. இதனை கொண்டு இட்லி, தோசை, புட்டு போன்ற உணவுகளில் தொடங்கி, குழந்தைகளுக்கு பிடித்தமான கேக், பிரவுனி, பிஸ்கட் போன்ற பேக்கிங் உணவுகள் வரை, அனைத்து விதமான உணவுகளையும் சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கலாம். தென்னிந்திய குடும்பங்கள் அனைத்தும் எப்போதும் விரும்பி சாப்பிடும் டிபன் என்றால் அது இட்லி, தோசை தான்.
இருப்பினும் இவற்றை சாதாரணமாக அரிசி மாவில் செய்வதை விட, சற்று வித்தியாசமாகவும், சத்தான முறையிலும் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் உங்கள் வீட்டில் சிறுதானியங்கள் இருந்தால் அதை வைத்தே சூப்பரான முறையில் தோசைக்கு மாவு தயாரிக்கலாம். காலங்காலமாக சிறுதானியப்பயறுகளை விளைவித்து சாப்பிட்டு ஆரோக்கியமாக நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். சிறுதானியங்களில் அளவுக்கதிகமான ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
அவற்றில் வகைவகையான சுவையான பதார்த்தங்களை செய்து சாப்பிடலாம். அதில் நாம் இன்று பார்க்க இருப்பது நம் ஆரோக்கியத்திற்கு உகந்த சுவையான சத்தான சத்தான சிறுதானிய தோசை. இந்த தோசையுடன் காரமான தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் ருசி அலாதியாக இருக்கும். உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. அதிகளவு சத்துக்கள் நிறைந்த தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. சத்துக்கள் நிறைந்த சிறு தானியங்களை கொண்டு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான சிறுதானிய பாஸ்தா இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!
Ingredients
Method
முதலில் இட்லி அரிசி, ராகி, தினை, வரகு, சாமை, கம்பு இவை அனைத்தையும் நன்கு தண்ணீரில் அலசி விட்டு இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை மாவரைப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் ஊற வைத்து கொள்ளவும். அவலை மாவு அரைப்பதற்கு கால் மணி நேரத்திற்கு முன் ஊற வைத்தால் போதுமானது.
பின் கிரைண்டரில் முதலில் உளுத்தம் பருப்பு, அவல் மற்றும் வெந்தயத்தை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் ஊற வைத்த அரிசி மற்றும் சிறுதானிய வகைகளை மாவுடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின் இந்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். மாவை ஆறு மணி நேரம் அப்படியே வைத்து புளிக்க வைத்து கொள்ளவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை சேர்த்து தோசையாக வார்த்து எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிறுதானிய தோசை தயார். இதற்கு தேங்காய் சட்னி அல்லது கார சட்னி வைத்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.






